ஐடி துறை, உற்பத்தி துறை, ஏற்றுமதி, சப்ளை செயின், மின்சாரம் என பல துறையில் சென்னை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் உலகின் நாடுகளில் இருந்து அடுத்தடுத்து நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வரும் காரணத்தால் சென்னை மக்கள் தொகையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தியேட்டர், ஹோட்டல் போன்ற அடிப்படை வசதிகளைத் தாண்டி பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா துறை விரிவாக்கம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு அருகில் மாபெரும் அம்யூஸ்மென்ட் பார்க் அமைக்க பிரபல வொண்டர்லா நிறுவனம் முடிவு செய்தது.

இந்த தீம்பார்க் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளப் பலரும் ஆர்வமாக இருக்கும் வேளையில் டிவிட்டரில் வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பார்க் கட்டுமான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது மட்டும் அல்லாமல் இந்நிறுவனம் இதை ரீடிவிட் செய்துள்ளது.
வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட், சென்னை-க்கு அருகில் திருப்போரூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அதன் நான்காவது தீம் பார்க்கை கட்டி வருகிறது. இந்த பூங்காவின் செயற்கைக்கோள் படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன, அதில் ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவது போல் தெரிகிறது.
வொடர்லா ஹாலிடேஸ் ஏற்கனவே கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, தெலுங்கானா-வில் ஹைதராபாத் மற்றும் கேரளாவில் உள்ள கொச்சி ஆகிய இடங்களில் தீம் பார்க்-களை கொண்டுள்ளது. சென்னை தீம் பார்க் 2025 ஜூன் மாதத்திற்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் இங்கு வரப்போவதாக வொண்டர்லா டிவிட்டரில் அப்டேட் செய்துள்ளது.
சென்னையில் உள்ள புதிய வொண்டர்லா பூங்கா திறக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டின் தலைநகரில் பொழுதுபோக்கு துறையில் புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதாரத்திற்கும் உதவி செய்யும்.
சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வொண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனம் சென்னை அருகே பொழுதுபோக்குப் பூங்கா தொடங்க ஒப்புதல் மற்றும் அனுமதியை 2023 ஆம் ஆண்டு பெற்றுள்ளது. இந்த மாபெரும் தீம் பார்க் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் உள்ள இல்லலூர் கிராமத்தில் சுமார் 62 ஏக்கர் பரப்பளவில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் இத்திட்டம் அமைக்கப்பட உள்ளது.
2015 இல் நடந்த தமிழ்நாட்டின் முதல் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் சென்னையில் அம்யூஸ்மென்ட் மற்றும் ரெஸ்சார்ட் கட்டுவதற்கு வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாடு அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆனால் 10 சதவீத கூடுதல் LBT எனப்படும் லோக்கர் பாடி டாக்ஸ் பிரச்சனை தொடர்பாகக் கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. இதன் பின்பு 10 வருட வரி விலக்கு தமிழக அரசு கொடுத்துள்ள காரணத்தால் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு 2025-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட சுற்றுலாத் துறை கொள்கையில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சுற்றுலா துறை வாயிலாக மேம்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த 5 வருடத்தில் சுமார் 20000 கோடி ரூபாய் முதலீட்டைச் சுற்றுலா துறை சார்ந்து ஈர்க்க இந்தக் கொள்கை மூலம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட சுற்றுலா துறை கொள்கையில் அம்யூஸ்மென்ட் பார்க், தீம் பார்க் பிரிவில் வரும் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளரம் முறையில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications