சென்னை பல துறையில் வேகமாக வளர்ந்து வரும் வேளையில், பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அவசியமாக உள்ளது. ஒரு நகரத்தில் முதலீடுகளை ஈர்க்க அனைத்து விதமான கட்டமைப்பும் அவசியம் இதில் பொழுதுபோக்கு, நைட் லைப், கொண்டாட்டங்களுக்கான வாய்ப்பு போன்றவையும் அவசியம். அந்த வகையில் சென்னையின் பொழுதுபோக்கு துறைக்கு புதிய அத்தியாயத்தை எழுதும் வகையில், வொண்டர்லா நிறுவனம் சென்னை அருகே மாபெரும் அம்யூஸ்மென்ட் பார்க்கை உருவாக்கி வருகிறது.
இங்கு இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் கொண்ட இந்த தீம் பார்க் அமைக்கப்படுவது தான் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த மாபெரும் அம்யூஸ்மென்ட் பார்க் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளப் பலரும் ஆர்வமாக இருக்கும் வேளையில் டிவிட்டரில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்டின் நிர்வாக இயக்குநர் அருண் சிட்டிலப்பிள்ளி டிவிட்டரில் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமைக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
திருப்போரூரில் உருவாகும் அதிசயம்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைந்துவரும் இந்த வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பார்க், சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகிறது. 2025 ஜூன் மாதத்திற்குள் திறக்கப்பட உள்ள இந்த வொண்டர்லா பூங்கா-வை நிர்வாகம் செய்து வரும் வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட் நிறுவனம் ஏற்கனவே கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் வெற்றிகரமாக இயக்கி வருகிறது.
சமீபத்திய கட்டுமானப் பணிகள்: சமூக வலைத்தளங்களில் வெளியான செயற்கைக்கோள் படங்கள், வீடியோக்கள், பூங்காவில் ரோலர் கோஸ்டர் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதைக் காட்டுகிறது. வொண்டர்லா நிறுவனமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்: சென்னை வொண்டர்லா தீம் பார்க்கில் அமைக்கப்படும் ரோலர் கோஸ்டர் இந்தியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பூங்காவிற்கு கூடுதல் அட்டிராக்ஷனாக இருப்பதில் சந்தேகமே இல்லை.

பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் துறை: சென்னை வொண்டர்லா தீம் பார்க் திறக்கப்படுவதன் மூலம், தமிழ்நாட்டின் தலைநகரில் பொழுதுபோக்குத் துறை புதிய உயரத்தை எட்டும். இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
தமிழ்நாடு அரசின் முயற்சி: 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில், வொண்டர்லா நிறுவனம் சென்னையில் அம்யூஸ்மென்ட் பார்க் அமைக்க ஒப்புதல் பெற்றது. ஆனால் பல்வேறு பிரச்சனையின் காரணமாகப் பல வருடங்கள் தாமதமானது. இந்த மாபெரும் அம்யூஸ்மென்ட் பார்க், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்களிப்பை அளிக்கும் என நம்பப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications