மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் உலகளாவிய எரிபொருள் சந்தைகளில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக பல நாடுகள் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில் சில நாடுகள் நாட்டு மக்களின் பணியாற்றும் முறையை மொத்தமாக மாற்ற முடிவு செய்துள்ளது, இதன் மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு பயன்பாட்டை குறைக்க முடிவு செய்துள்ளது.

தாய்லாந்தில் 'Work From Home'
தாய்லாந்து அரசு எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. அந்நாட்டின் பிரதமர் Anutin Charnvirakul, அரசு ஊழியர்கள் எரிபொருள்யை சேமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை தற்காலிகமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு அலுவலகங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவையில்லாத லைட்கள் மற்றும் மின்சாதனங்களை ஆப் செய்து வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் லிப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் எரிபொருள் கையிருப்பு குறைவு
தாய்லாந்து தற்போது சுமார் 95 நாட்களுக்கு மட்டுமே போதுமான எரிபொருள் கையிருப்பை வைத்திருப்பதாக அந்நாட்டு எரிபொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கூடுதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) பெறும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டில் எரிபொருள் தேவையை குறைப்பது முக்கியமான முன்னுரிமையாக மாறியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய பெரும் பாதிப்பு
மத்திய கிழக்கு போர் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளை பெரிய அளவு பாதித்துள்ளன. தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் நிறுவனங்களுக்கு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டிய நாட்களை குறைக்க பரிந்துரை செய்து வருகின்றன. இதன் மூலம் 2 நாடுகளிலும் கொரோனா தொற்றுக்கு பின்பு Work From Home நடைமுறைக்கு வந்துள்ளது. போக்குவரத்து மற்றும் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதே அரசுகளின் நோக்கமாக உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை
எரிபொருள் நெருக்கடியின் தாக்கம் காரணமாக பாகிஸ்தான் அரசு எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சில நாட்களுக்கு மூடியுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவை 50 சதவீதம் வரை குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்குப் பிறகு இலங்கையும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் எரிபொருள் தேவையை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டு உள்ளது
இந்தியாவில் LPG விநியோக
இந்த சூழ்நிலையில் இந்தியாவிலும் எரிபொருள் விநியோகத்தில் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் அரசு வீட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் உணவகங்கள், பேக்கரிகள் மூடப்பட்டு வருகிறது.
ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் உணவு தொடர்பான வணிக நிறுவனங்கள் LPG கிடைப்பதில் சிக்கலை சந்தித்து வருகிறது.
விமான சேவைகளுக்கும் பாதிப்பு
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமான எரிபொருள் (Jet Fuel) கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகும் அபாயமும் உள்ளது. இதனால் விமான டிக்கெட் விலைகள் பல இடங்களில் வேகமாக உயர்ந்து வருவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில நாடுகள் தேவையற்ற விமான பயணங்களை குறைக்க மக்களிடம் வேண்டுகோள் பல நாடுகளில் வந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications