சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வந்தே பணிபுரிய வேண்டும் என நிர்பந்தம் செய்து வருகின்றன. இதனால் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த சூழலில் சில நிறுவனங்கள் தேவை அடிப்படையில் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்திலிருந்து பணிபுரிவதற்கான அனுமதியையும் வழங்குவது தி எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் தெரிய வந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி தந்தன. ஆனால் தொற்று முடிவடைந்த பிறகு ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என கூறி வருகின்றன.
இருந்தாலும் சில ஊழியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் நிறுவனங்கள் இப்படித்தான் வரவேண்டும் என ஊழியர்களிடம் நிர்ப்பந்தம் செய்ய முடியாத சூழல் உருவாகி இருக்கிறது என Mercer எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான மேலாளர் அரவிந்த் கூறியுள்ளார்.
"நிறுவனங்கள் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் பணி வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக பகுதி நேர வேலை வாய்ப்புகள், குழந்தைப் பேறு காரணமாக விடுப்பு எடுத்து மீண்டும் பணிக்கு வரக்கூடிய பெண்கள் மற்றும் சிறப்பு வசதிகள் தேவைப்படக்கூடிய நபர்கள் என பல தரப்பட்டவர்களுக்கும் தற்போது பணி வாய்ப்புகளை வழங்கியுள்ளதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் தங்களது வேலை அமைப்பும் முறையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என அரவிந்த் கூறியுள்ளார் ஐடிசி, ஊபர், பேனசோனிக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களில் சிறப்பு தேவைகள் இருப்பவர்களுக்கு தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பை தந்துள்ளன எனக் கூறியுள்ளார்.
தாங்கள் ஊழியர்களின் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ளக்கூடிய நிறுவனம் என்பதை முன் வைப்பதற்காகவும், திறமையான பணியாளர்களை இழந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் இத்தகைய அணுகுமுறையை கையாளுவது தெரியவந்துள்ளது.
ஐடிசி நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் தங்களது ஊழியர்களில் குழந்தைகளை பராமரிக்கும் சூழலில் இருப்பவர்கள், உடல்நிலை காரணமாக அலுவலகத்திற்கு வர முடியாமல் இருப்பவர்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்யும் வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.
தங்களது ஊழியர்கள் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வரவேண்டிய சூழல் ஏற்படும்போது அவர்களது குழந்தையை பராமரிப்பதற்கான ஆட்களை நியமனம் செய்வது அதற்கான தொகையை வழங்குவது உள்ளிட்ட வசதிகளை கூட தங்களது நிறுவனமே செய்து தருவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
வயதான பெற்றோர்களை பராமரிக்க வேண்டும் அல்லது மாமனார் மாமியாரை பராமரிக்க வேண்டும், கணவருக்கு கட்டாயம் அலுவலகத்திற்கு சென்று தான் வேலை செய்யக்கூடிய சூழல் இருக்கிறது இதுபோன்ற காரணங்களுக்காகவும், மாற்று திறனாளிகளால் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து போக முடியாது என்பன போன்ற காரணங்களுக்காகவும் வீட்டிலிருந்தே பணி புரியும் அனுமதி தரப்படுவதாக Publicis Sapient நிறுவனத்தின் தலைவர் மகேஸ்வரி ராவ் கூறியுள்ளார்.
பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு காலாண்டில் 5 நாட்களுக்கு மட்டும் அலுவலகத்திற்கு வந்து முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களில் மட்டும் கலந்து கொண்டால் போதும் மற்ற நேரங்களில் அவர்கள் விரும்பும் இடத்தில் இருந்து பணி செய்யலாம் என்ற பாலிசிகளையும் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பேனசோனிக் நிறுவனத்தின் ஹெச் ஆர் அதிகாரியான ஆதர்ஸ் மிஸ்ரா தங்களது நிறுவனம் உற்பத்தி மற்றும் விற்பனை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் பெரும்பாலான ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான வாய்ப்புகளை தர முடிவதில்லை இருப்பினும் அப்படி ஒரு தேவை இருப்பவர்களுக்கு இத்தகைய வசதிகளை செய்து தருகிறோம் எனக் கூறியுள்ளார் இதேபோல உபர் நிறுவனமும் தங்களது பெரும்பாலான ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வாய்ப்புகளை தந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications