2021ஆம் ஆண்டின் இறுதி நாட்களுக்கு வந்துவிட்டோம், ஆனால் 2 வருடமாக நம்மை ஆட்டிப்படைக்கும் கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்புவோம் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் மூலம் ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் மீண்டும் 2020 துவக்கத்தைப் போலவே வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
ஒமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று
திங்கட்கிழமை ஒமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு மற்றும் மோடியின் பேச்சுக்குப் பின்பு நாடு முழுவதும் நிறுவனங்கள், தொழிற்சாலையில் கடுமையான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
இதுமட்டும் அல்லாமல் நிறுவனங்கள் ஊழியர்களை முடிந்த வரையில் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் எனவும், வேலை நேரத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு நிர்வாகம் செய்யவும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா அலை
முதல் கொரோனா அலையிலும் சரி, 2வது கொரோனா அலையிலும் சரி ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் தான் முதலில் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் ஒமிக்ரான் பரவியுள்ள இந்த வேளையில் ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் FMCG துவங்கி அனைத்துத் துறை முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களுக்கு Work From Home கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது.
முக்கிய நிறுவனங்கள்
RPG குரூப், டாபர் இந்தியா, மாரிக்கோ, மைக்ரோசாப்ட், பிளிப்கார்ட், மீஷோ, நோ ப்ரோக்கர், மேக்மைடிரிப், பார்லே, புமா, நெட்ஆப், DLF எனப் பல நிறுவனங்கள் அதிகப்படியான எச்சரிக்கையுடன் ஊழியர்களுக்கு WFH ஆப்ஷனை கொடுக்கத் துவங்கியுள்ளது.
அடுத்த 6 மாதம்
இதேபோல் அடுத்த இரண்டு மற்றும் மூன்று மாதத்தில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் திட்டமிட்டு இருந்த நிறுவனங்கள் தற்காலிகமாக இத்திட்டதை நிறுத்தியுள்ளது. இதனால் அடுத்த 6 மாத காலம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications