வெர்க் ப்ரம் ஹோம், வெர்க் ப்ரம் ஆபீஸ்: மன நலனுக்கு எது சிறந்தது? – ஆய்வில் வெளியான பரபர தகவல்

சென்னை: கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. தற்போது உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாலும் ஊழியர்கள் ரிமோட் முறையிலான வேலையையே விரும்புகின்றனர்.

சர்வதேச அளவில் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என கூறுகின்றன. எனவே வீட்டிலிருந்து பணி செய்வது ஊழியர்கள் மன நலனுக்கு சிறந்ததா அல்லது அலுவலகம் சென்று பணி செய்வது சிறந்ததா என்ற விவாதம் எழுந்துள்ளது.

வெர்க் ப்ரம் ஹோம், வெர்க் ப்ரம் ஆபீஸ்: மன நலனுக்கு எது சிறந்தது? – ஆய்வில் வெளியான பரபர தகவல்

இந்நிலையில் உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன் படி இந்தியாவில் அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்கள் மற்றும் வீட்டில் இருந்து பணிபுரிபவர்களின் மனநலன்களை ஆராயும்போது அலுவலகத்தில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் மனநலன் தான் சிறப்பாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களின் மனநலன் சிறப்பாக இருக்கிறது என்றால் இந்தியாவில் அது அப்படியே எதிர்மறையாக இருப்பது தெரியவந்துள்ளது. Sapiens Labs என்ற நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்களிடம் ஆன்லைனில் சர்வே நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி அலுவலகத்திற்கு சென்று நேரடியாக பணிபுரியும் ஊழியர்களின் மனநலன் விகிதம் 61.8 ஆக இருக்கிறதாம். ஹைபிரிட் முறையில் பணிபுரிபவர்களின் மனநல விகிதம் 48 ஆகவும் முழுவதுமாக வீட்டில் இருந்து மட்டுமே பணிபுரியும் ஊழியர்களின் மனநலம் 30 என்ற அளவில் இருக்கிறது.

ஒரு அலுவலகத்தில் 15 நபர்களுக்கு மேற்பட்ட ஒரு குழுவில் வேலை செய்யும் போது அவர்களின் மனநலன் 72 ஆக அதிகரிக்கிறதாம். கிட்டத்தட்ட 65 நாடுகளை சேர்ந்த 54,831 ஊழியர்களிடம் ஆன்லைன் வாயிலாக இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. பணி கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் மனநலன் என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கேள்விகளின் அடிப்படையில் தான் சர்வே முடிவு வெளியிடப்பட்டுள்ளது மேலும் வேலைப்பளு தான் தற்போது ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் மன அழுத்தம் தருவதாக இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அலுவலகத்திற்கு சென்று பணி புரியும் போது சக ஊழியர்களுடன் ஏற்படக்கூடிய நட்பு ஊழியர்களின் மன நலனுக்கு நன்மை பயக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. எந்த வேலையாக இருந்தாலும் இப்படி குழுவாக இணைந்து ஓரிடத்தில் வேலை செய்யும் போது அவர்களின் மன நலன் சிறந்ததாக இருக்கிறது என இந்த அறிக்கை கூறுகிறது.

அதே வேளையில் இந்தியாவில் வாடிக்கையாளர் சேவை பணிகளில் இருப்பவர்களின் மனநலன் மிகக் குறைந்த விகிதத்தில் இருக்கிறது. இவர்களின் மனநலன் விகிதம் வெறும் 38.9 ஆகும்.

இதுவே தொழில் மேலாண்மை நிர்வாக பிரிவுகளில் இருப்பவர்களின் மனநலன் 63.5 ஆகவும், ஹியூமன் கேர் பிரிவுகளில் இருக்கும் ஊழியர்களின் மனநலன் 70.5 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 5000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+