70 மணி நேர வேலைக்கு 35 மணி நேர சம்பளம்.. இதுதான் உழைப்புக்கேற்ற ஊதியமா? கொந்தளிக்கும் ஊழியர்கள்..!!

இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை சூழல், எதிர்பார்ப்புகள் மற்றும் சம்பளம் ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகள் குறித்து ஒரு தீவிரமான விவாதம் தற்போது ஆன்லைனில் எழுந்துள்ளது. ஒரு பட்டய கணக்காளர் போட்ட பதிவு ஒன்று, இளம் ஊழியர்களின் உணர்வுகளை தொட்டதால், அது மின்னல் வேகத்தில் வைரலாகி, அவர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

பட்டயக் கணக்காளரும் ஆசிரியருமான மீனல் கோயல் என்பவர், லிங்க்ட்இன் தளத்தில், "35 மணி நேர வேலைக்குரிய சம்பளத்தை மட்டுமே கொடுத்துவிட்டு, ஒரு ஊழியரிடம் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று சொல்ல முடியாது" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு, வேலையில் அதிக சுமை மற்றும் தங்களின் உழைப்புக்குரிய உரிய மதிப்பு கிடைக்கவில்லை என்று உணரும் ஆயிரக்கணக்கான இளம் ஊழியர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.

70 மணி நேர வேலைக்கு 35 மணி நேர சம்பளம்.. இதுதான் உழைப்புக்கேற்ற ஊதியமா? கொந்தளிக்கும் ஊழியர்கள்..!!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில், சீனாவில் பிரபலமாக உள்ள '9-9-6' வேலை மாதிரியை (காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரத்தில் 6 நாட்கள்) இந்தியா பின்பற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த கட்டுப்பாடு எழுந்துள்ளது.

மேலும் மீனல் கோயல் கூறுகையில், "சீனாவில் அந்த மாதிரியான உழைப்பு கலாச்சாரம் வெற்றி பெறக் காரணம், அங்குள்ள சம்பளம், பதவி உயர்வு மற்றும் பணிச் சூழல் ஆகியவை உழைப்புக்கு ஏற்றபடி சீராக உள்ளன. ஆனால், இந்தியாவில் சம்பளம், வளர்ச்சிப் பாதை மற்றும் வேலைக் கலாச்சாரம் ஆகியவற்றை சரிசெய்யாமல், இளைஞர்களை 70 மணி நேரம் உழைக்கும்படி கேட்பது வெறும் லட்சியமாக இருக்காது. இது அப்பட்டமான சுரண்டலும் சமநிலையற்ற தன்மையுமாகும்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பெருநிறுவனங்களின் நோக்கம் வெறும் லாபமாக மட்டுமே உள்ளதற்கு கோயல் ஒரு வலுவான உதாரணத்தை சுட்டிக் காட்டியுள்ளார். இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் தொடக்க நிலை சம்பளம், சுமார் 2011-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் என்ற அளவிலேயே மாறாமல் நீடிக்கிறது. இதனால், இத்தனை வருடங்களில் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ள போதிலும், புதிய ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கவில்லை.

மக்கள் கடின உழைப்பை தவிர்க்கவில்லை. ஆனால், தங்கள் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய மதிப்பை தராமல், குறைவாக மதிப்பிடுவதை தான் அவர்கள் தவிர்க்கிறார்கள் என்று கோயல் கூறியுள்ளார். இவரின் கருத்துக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பங்கு ஆராய்ச்சி நிபுணர் கருத்து தெரிவிக்கையில், "சம்பளத்தை உயர்த்தாமல் அதிக நேரம் வேலை செய்ய கோருவது, நிறுவனத்தின் மீதுள்ள விசுவாசத்தை ஒருபோதும் உருவாக்காது" என்று தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக, இளம் பணியாளர்கள் தாங்கள் அதிகம் உழைப்பதாகவும், அதற்கு ஈடான வருமானம் மற்றும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் உணர்வதால், இந்தப் பெருநிறுவனக் கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+