சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ள பிரபல Co-Working ஸ்பேஸ் நிறுவனமான வேர்க்காஃபல்லா, தற்போது கோவை நகரத்திலும் தனது வர்த்தகத்தைத் தொடங்க உள்ளது. Workafella நிறுவனம் இந்த நிதியாண்டில் சுமார் 2000 இருக்கைகளுடன் ஒரு கோ-வொர்க்கிங் ஸ்பேஸ்-ஐ தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கோவை நகரில் மட்டும் சுமார் 16,000 கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் சீட்-கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Workafella நிறுவனம் தொழில்முனைவோர், பெரிய நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ப்ரீலான்சர்ஸ் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு அலுவலக இடங்களை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

Workafella நிறுவனம் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் தலா 5-க்கும் அதிகமான இடங்களில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் தளங்களை வைத்துள்ளது. குறிப்பாகச் சென்னையில் ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்கிளில் கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் தளத்தை வைத்துள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் தாண்டி பெங்களூர், கூர்கான் போன்ற நகரங்களிலும் தனது கிளையைத் திறந்துள்ளது.
இந்த நிலையில் Workafella நிறுவனம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகரில் உருவாக்கியிருக்கும் ஐடி சேவைத் துறையின் இமாலய வளர்ச்சியை கண்டு வியந்து தற்போது தனது சேவையைக் கொங்கு மண்டலத்தில் துவங்கியுள்ளது. இதேபோல் கோவையில் சிறிய அளவிலான நிறுவனங்களும், தொழில் துறையினரும் அதிகம் என்பதால் கோ வொர்கிங் ஸ்பேஸ்-க்கு மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் இருக்கும் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள கோ வொர்கிங் ஸ்பேஸ் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவது, நிறுவனங்கள், வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஒரு எளிய வொர்க் ஸ்பேஸ்-க்குகான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு இணையாகத் தமிழ்நாட்டின் சிறிய நகரங்களும் கோ வொர்கிங் ஸ்பேஸ்-க்கான தேவை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற நகரங்களிலும் கோ வொர்கிங் ஸ்பேஸ்-க்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த துறையில் உள்ள நிறுவனங்கள் தற்போது இந்த நகரங்களில் முதலீடு செய்து வருகின்றன.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள் (GCC), பாரம்பரிய தொழில்கள் மற்றும் மாணவர்கள் கூடகோ வொர்கிங் ஸ்பேஸ் தேர்வு செய்கின்றனர்.
சிறு நிறுவனங்களின் வருகையும், அலுவலக செலவுகள் குறைவு ஆகிய இரு காரணத்தாலேயே கோ வொர்கிங் ஸ்பேஸ்-க்கான தேவை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இத்தகைய கோ வொர்கிங் ஸ்பேஸ்-க்கு அதிகமான வைப்புத்தொகை தேவையில்லை. கோ வொர்கிங் ஸ்பேஸ்-ல் இருக்கைகளை ஒரு நாள் அல்லது ஒரு வாரத்திற்குக் கூட வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு நாள் கட்டணம் என்பது, இடம், வசதிகள், கான்பிரென்ஸ் ரூம், ப்ரோஜெக்டர் போன்ற தேவையான உள்கட்டமைப்பைப் பொறுத்து கட்டணம் ரூ.500 முதல் ரூ.1,200 வரை மாறுபடும். மேலும் இத்தகைய கோ வொர்கிங் ஸ்பேஸ்-ல் வைஃபை, ஏர் கண்டிஷனிங் மற்றும் ரிஃப்ரெஷ்மெண்ட் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் இருக்கும் காரணத்தால் புதிதாக அலுவலகத்தைத் துவங்குவோருக்கு கோ வொர்கிங் ஸ்பேஸ் விருப்ப தேர்வாக உள்ளது.
இத்தகைய கோ வொர்கிங் ஸ்பேஸ்-ல் சகல வசதிகள் கொண்ட ஒரு இடத்திற்கு ஒரு சீட்டுக்கு மாதம் ரூ.6,500-ரூ.15,000 வரை இருக்கும். இதேபோல் நாட்டில் பல நகரங்களில் ஓரே நேரத்தில் வர்த்தகத்தை அமைக்க இந்த கோ வொர்கிங் ஸ்பேஸ் சிறப்பான தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications