தினமும் 14 மணி நேரம் வேலை செய்து பதவி உயர்வு கிடைத்தது.. ஆனா அடுத்த நாளே விவாகரத்து..!

உலகம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் தங்களுக்கு எவ்வளவு தான் பணிச்சுமை இருந்தாலும் தங்களுக்காகவும் குடும்பத்திற்காகவும் நேரத்தை ஒதுக்கிட வேண்டும் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இது அந்த ஊழியரின் உடல்நலன் மனநலன் உள்ளிட்டவற்றுக்கு மிகவும் முக்கியம்.

அவ்வாறு தன்னையும் குடும்பத்தையும் பார்க்காமல் நிறுவனத்திற்காக உழைத்த ஒரு நபர் தற்போது விவாகரத்தை எதிர்கொண்டு இருக்கிறார். உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் இ காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு நபர் தனக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைத்தாராம். இதன் மூலம் அவர் எதிர்பார்த்த பதவி உயர்வும் 7.8 கோடி ரூபாய் என்ற ஊதிய உயர்வும் கிடைத்துவிட்டது. ஆனால் அவருடைய மனைவி விவாகரத்துக் கோரி இருக்கிறார்.

தினமும் 14 மணி நேரம் வேலை செய்து பதவி உயர்வு கிடைத்தது.. ஆனா அடுத்த நாளே விவாகரத்து..!

பிளைண்ட் என்ற தளத்தில் ஒரு நபர் தன்னுடைய சொந்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் என்னுடைய பதவி உயர்வுக்காக நான் என் தனிப்பட்ட வாழ்க்கையும் மகிழ்ச்சியையும் விட்டுக் கொடுத்து விட்டேன் என்பதை நான் இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார் .

வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் வேண்டும் என்பதற்காக நான் காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை செய்தேன். இவ்வாறு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைத்ததால் நான் என் மகள் பிறந்த என் வாழ்வின் முக்கியமான தருணத்தை இழந்து விட்டேன் என கூறியுள்ளார்.

என் மகள் பிறந்த பிறகு என்னுடைய மனைவிக்கு ஒரு கணவனாக நான் என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அந்த உதவிகள் எதையுமே என்னால் செய்ய முடியவில்லை, என் குழந்தை பிறந்த அன்று நான் மீட்டிங்கில் இருந்தேன் குழந்தை பிறப்புக்கு பிறகு என்னுடைய மனைவி பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டார் அப்போது அவருடன் இருந்து அவருக்கு என்னால் உதவி செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.

நான் எதிர்பார்த்தபடி எனக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைத்துவிட்டது ஆனால் இதற்காக நான் என் மனைவியும் குடும்பத்தையும் இழந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. நாங்களும் வாழ்வில் வேலை என இருந்து விட்டு தனிப்பட்ட வாழ்க்கையை கொண்டாடாமல் விட்டு விட்டோம் தங்களின் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

வேலையும் பதவி உயர்வும் நமக்கு எப்பொழுது வேண்டுமானாலும் கிடைக்கும் நம் குடும்பத்தினருடன் சில மறக்க முடியாத நிகழ்வுகளை நம்மால் திரும்பக் கொண்டு வர முடியாது எனவே வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலை செய்வது மிகவும் முக்கியம் என பலரும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+