இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்காக உலக வங்கி 245 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வே துறையில் உள்ள சரக்கு போக்குவரத்து மற்றும் சேமிப்பு கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் ரயில்வே துறையை மேலும் நவீனபடுத்துவதற்காகவும் உலக வங்கி இந்த கடனை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சரக்கு போக்குவரத்தில் ரயில்வே துறை மிகப்பெரிய அளவில் மேம்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் ரயில்வே
உலக வங்கியின் நிதியுதவியால் ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்தை நவீனப்படுத்தப்பட்ட பின்னர் தனியார் முதலீடுகள் ரயில்வே துறையில் குவிய வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்கு ரயில்கள்
இந்தியாவில் தற்போது 71 சதவீதம் சரக்குகள் சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ரயில்வே துறையில் உள்ள சரக்கு போக்குவரத்து நவீனமாக்கினால் ரயில்வே மூலம் செல்லும் சரக்குகளின் அளவு அதிகரிக்கும்.
காற்று மாசுபாடு
கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்து தனது பங்கை இழந்து கொண்டே வரும் நிலையில் சாலை போக்குவரத்தில் தான் அதிகமாக சரக்கு போக்குவரத்து நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக காற்று மாசுபாடு, சாலை விபத்துக்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதால் மீண்டும் ரயில்வே துறையின் சரக்கு போக்குவரத்து துறையை விரிவுபடுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
உலக வங்கி
இதனையடுத்தே ரயில்வே சரக்கு போக்குவரத்தை நவீனமாக்க உலக வங்கியை ரயில்வே துறை நாடியது. இந்நிலையில் தற்போது ரயில்வே துறைக்கு உலக வங்கி 245 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
சுற்றுச்சூழல்
2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே துறை கார்பனை வெளியேற்றாத ஜீரோ நிலையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 7.5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை மற்றும் பிற வாயுக்களை வெளியேற்றி சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் நிலையில் வரும் 2030ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த பிரச்சனையே இருக்காது என்று கூறப்படுகிறது.
நெரிசல் குறையும்
இதுகுறித்து உலக வங்கியின் இந்தியாவின் செயல்பாட்டு மேலாளர் மற்றும் செயல் இயக்குனரான ஹிடேகி மோரி அவர்கள் கூறியபோடு, ரயில்களில் இருந்து கிரீன்ஹவுஸ் வாயுக்களை குறைக்கும் அதே வேளையில், புதிய திட்டம் இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான ரயில் பயணிகளுக்கு நன்மை பயக்கும் என்றும், ஏனெனில் ரயில் பாதைகள் பிரத்யேக வழித்தடங்களுக்கு சரக்குகளை நகர்த்துவதன் மூலம் நெரிசலைக் குறைக்கின்றன' என்றும் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications