பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், சேவை வழங்குவதை வலுப்படுத்துவதற்கு உதவ உலக வங்கி பல ஆண்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் பாகிஸ்தானுக்கு உலக வங்கி சுமார் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை அளிக்க உள்ளது.
மேலும் இந்த நிதியை உலக வங்கி தனது PRID-MPA திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது, பாகிஸ்தான் செயல்பாடுகள் மற்றும் வெற்றியின் அடிப்படையில் அதிகபட்சமாக 1.35 பில்லியன் டாலர் வரையிலான நிதியுதவியை பெற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

இதில் முதல் கட்டமாக 600 மில்லியன் டாலர் பாகிஸ்தான் அரசு திட்டங்களுக்கும், 100 மில்லியன் டாலர் சிந்து மாகாண திட்டங்களுக்கும் செலவிடப்படும் என தெரிவித்துள்ளது. இந்த உதவி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் பிரச்சனைக்கு பின்பு பாகிஸ்தான் அரசு அமெரிக்காவுடன் அதிகளவில் நெருக்கம் காட்டி வருகிறது. உதாரணமாக டிரம்ப்-க்கு நோபல் பரிசு பெற பரிந்துரைத்தது முதல் பல விஷயங்கள் அமெரிக்காவுக்கும், டிரம்ப்-க்கும் சாதகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவுடன் முக்கியமான ஆயுத ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் ஆயுத ஒப்பந்தம்
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு F-16 போர் விமானங்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்க கடந்த வாரம் சுமார் 686 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியா - அமெரிக்கா மத்தியிலான ஆயுத ஒப்பந்தம் வெளியான ஒரு வாரத்தில் நடந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. இந்தியாவுக்கு 93 மில்லியன் டாலர் ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
காசா தாக்குதல்
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் மிகவும் மோசமாக இருந்தது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் பாகிஸ்தான் காசா பகுதியில் International Stabilisation Force (ISF)க்கு படையினரை அனுப்ப தயார் என தெரிவித்ததாக வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும் மார்கோ ரூபியோ பாகிஸ்தானின் உதவியை வரவேற்றுள்ளார்.
International Stabilisation Force (ISF) என்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications