இந்திய பொருளாதாரம் கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட மோசமான சரிவுக்கு பிறகு, மிக வேகமான மீண்டு வந்து கொண்டுள்ளது.
அதிலும் கடந்த ஆண்டில் நாடு தழுவிய முழு லாக்டவுனுக்கு பிறகு, வரலாறு காணாத அளவு பொருளாதாரம் சரிவினைக் கண்டது.

இதற்கிடையில் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், இன்னும் முழுமையாக வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை என்று உலக வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் 21 - 2022ம் நிதியாண்டில் இந்தியாவில் ரியல் ஜிடிபி விகிதம் 7.5 - 12.5% வரை இருக்கலாம் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முன்பே மந்த நிலையில் இருந்தது. கடந்த 2017ம் நிதியாண்டில் 8.3% ஆக வளர்ச்சி கண்ட நிலையில், 2020ம் நிதியாண்டில் வெறும் 4% மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது.
நிலவி வந்த பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் தனியார் நுகர்வு என்பது குறைந்து விட்டது. நிதித்துறையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட பல காரணிகளினால் மந்த நிலை இன்னும் மோசமானது. இதனால் வளர்ச்சியானது சரிவினைக் கண்டது. இந்த நிலையில் கொரோனாவின் காரணமாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
எப்படி இருப்பினும் பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. குறிப்பாக உள்நாட்டிலும், முக்கிய ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளன. ஆனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது மீண்டும் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தொடர்ச்சியான நிதிக் கொள்கை மற்றும் சர்வதேச பணப்புழக்க நிலைமைகளால் மூலதன வரவுகள் கணிக்கப்படுகின்றன. இதற்கிடையில் தான் 2022ம் நிதியாண்டில் வளர்ச்சி விகிதமானது சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தடுப்பூசிகள் பற்றிய பிரச்சாரம் மேலோங்கியுள்ளது. இதே ஒரு வருடத்திற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது இந்தியா ஆச்சரியப்படும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே ஒரு வருடத்திற்கு முன்பு மோசமாக பாதிகப்பட்டு, 30 - 40% அளவுக்கு மோசமான சரிவினைக் கண்டது. அப்போது கொரோனா பற்றிய நிச்சயமற்ற தன்மையே இருந்து வந்தது. தடுப்பூசி பற்றிய ஒரு தெளிவு இல்லை. ஆனால் தற்போது இந்தியா தற்போது தடுப்பூசி போடுவதை தொடங்கியுள்ளது. தடுப்பூசி உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது.
எனினும் நிலைமை இன்னும் சவலான நிலைமையில் தான் உள்ளது. ஏனெனில் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மிகப்பெரிய சவாலான விஷயம். இதனை பலரும் எளிதான விஷயமாக பார்க்கின்றனர். ஆனால் இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதோடு இந்தியாவின் கடன் விகிதமும் அதிகரித்துள்ளது. இது 2022ம் நிதியாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% மேல் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications