இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக மே மாதம் 3 ஆம் தேதி பொறுப்பேற்றார். சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய இரண்டிலும் தலைவர் பதவியை வகித்த முதல் இந்தியராக அஜய் பங்கா திகழ்கிறார். இதை தொடர்ந்து உலக வங்கி செவ்வாய்க்கிழமை புதிய பொருளாதார வளர்ச்சி கணிப்பை வெளியிட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டில் பல நாடுகள் ரெசிஷனுக்குள் நுழையும் என கணிப்புகள் வெளியான நிலையில், ஜெர்மனி 2 காலாண்டுகளாக் எதிர்மறையான GDP அளவீட்டை பதிவு செய்த நிலையில் முதலீட்டு சந்தை அதிகப்படியான தடுமாற்றத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில் உலக வங்கியின் 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியின் புதிய கணிப்புகள் உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கை கொடுத்தாலும், இந்தியாவுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
செவ்வாய்க்கிழமை உலக வங்கியின் 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பு அறிக்கையில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீட்டை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா மற்றும் உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் கணித்தை காட்டிலும் வலிமையாக இருப்பதாலும், நிலைமை மாறியுள்ளதாலும் 2023 global growth கணிப்பை உயர்த்தியுள்ளது.
ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக குறைத்துள்ளது, இது ஜனவரி மாத முந்தைய கணிப்பை காட்டிலும் 0.3 சதவீத குறைவாகும். 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதமாக மதிப்பிட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இதை தொடர்ந்து 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) 7.6 சதவிகிதத்துடன் இந்த ஆண்டின் மொத்த GDP வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என கணித்துள்ளது. ஆனால் உலக வாங்கியின் கணிப்பில் 6.6 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக குறைத்துள்ளது.
உலக வங்கி தனது ஜனவரி கணிப்பில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி என்பது 1.7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த நிலையில், தற்போது 2.1 சதவீதமாக இருக்கும என கணித்துள்ளது. சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீடு 2022ல் 3.1 சதவீதமாகவும், 2023ல் 2.1 சதவீதமாகவும் இறங்கியுள்ளது. 2025 ல் மீண்டும் 3 சதவீதத்திற்கு உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
உலக வங்கியின் வளர்ச்சி அளவுகளின் கணிப்புகள் உயர அமெரிக்க அரசின் கடன் வரம்பை உயர்த்த அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கிடைத்த ஒப்புதல் காரணமாக இது நடந்திருக்கலாம் என தெரிகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications