வங்கதேசத்தைவிட, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும்.. உலக வங்கி அறிக்கையில் ஷாக் தகவல்

நியூயார்க்: 2020 நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5% ஆக இருக்கும் என, உலக வங்கி தெரிவித்துள்ளது. 6% பொருளாதார வளர்ச்சி என்ற தனது, முந்தைய மதிப்பீட்டை உலக வங்கி தளர்த்திக் கொண்டுள்ளது.

சமீபத்தில்தான், நாட்டின் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்திய ஜிடிபி 5% வளர்ச்சியைதான் எட்ட முடியும் என கூறியிருந்தது. 11 ஆண்டுகளுக்கு பிறகு, இதுதான் மிக குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

அதேநேரம், அடுத்த நிதியாண்டில் இந்தியாவின், பொருளாதார வளர்ச்சி 5.8% ஆக சற்று மேம்படும், என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. இது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உலக வங்கி

உலக வங்கி

உலக வங்கியின் உலகளாவிய பொருளாதார அறிக்கை, நேற்று வெளியிடப்பட்டது. இந்தியாவில், வங்கி சாராத நிதி நிறுவனங்களிடமிருந்து (என்.பி.எஃப்.சி) கடன் பெறுவதில் பலவீனமான போக்கு இருப்பதாக, அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக, இந்திய பொருளாதாரம் தடம் புரண்ட 2008-09 நிதியாண்டின்போது, 3.1% பொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவில் இருக்கும் என உலக வங்கி கணித்தது. அதன்பிறகு, இப்போதுதான், 2வது மிக குறைந்த பொருளாதார வளர்ச்சியை, உலக வங்கி கணித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

உலக வங்கியின், இந்த அறிக்கை, இந்திய ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாத மதிப்பீட்டிற்கு ஏற்ப உள்ளது. ஏனெனில் ரிசர்வ் வங்கி, இந்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5% என்ற அளவில்தான் இருக்கும் என தெரிவித்துள்ளது.

உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம்

ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, நடப்பு காலண்டர் ஆண்டில் 2.5% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க மோசமான நிலையிலிருந்து எழுந்துள்ள மீட்சியாகும். முதலீடு மற்றும் வர்த்தகத்தில் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, நடப்பு காலண்டர் ஆண்டில் 2.5% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க மோசமான நிலையிலிருந்து எழுந்துள்ள மீட்சியாகும். முதலீடு மற்றும் வர்த்தகத்தில் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும்.

வங்கதேசம் பொருளாதார வளர்ச்சி

வங்கதேசம் பொருளாதார வளர்ச்சி

ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி, ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த நிதியாண்டில் வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக குறையும் என்று கணித்துள்ளது. அதாவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைவிட வங்கதேசம் முன்னிலையில் இருக்கப்போகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 3% மற்றும் 3.3% என்ற அளவில்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்காசியா

தெற்காசியா

ஒட்டுமொத்தமாக, 2020 காலண்டர் ஆண்டில், தெற்காசிய பிராந்தியத்தில் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி 5.5% ஆக இருக்கும் என்று இது மதிப்பிடுகிறது. ஒட்டுமொத்த தெற்காசிய வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிட்டாலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைவாகத்தான் இருக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+