சென்னை: 2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான கருத்துக் கணிப்பை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. உலக வங்கி இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. 20 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து இந்த கணிப்பை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
ஜிடிபி என்பது ஒரு நாட்டில் குறிப்பிட்ட காலக் கட்டத்தில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product). இதனைக் கருத்தில் கொண்டு தான் ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்தந்த நிதியாண்டில் குறைந்துள்ளதா கூடியுள்ளதா எனக் கணக்கிடப்படுகிறது.

2024 நிதியாண்டு 7.5% GDP வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் நிசியாண்டுக்கான குறைந்த ஜிடிபி வளர்ச்சியை உலக வங்கி கணித்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில் அரசாங்கம் செய்த பெரிய முதலீடுகளின் காரணமாக வரும் ஆண்டுகளில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24 முதல் 2024-25 வரையிலான GDP வளர்ச்சி குறைவாக இருப்பினும், சேவை மற்றும் தொழில் துறைகள் வலுவான வளர்ச்சியைப் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளை எதிர்பார்க்கலாம்.
மேலும், பணவீக்கம் குறையும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது, நிதி நிலைமைகள் மேம்படும். வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறப்பாக நிர்வகிப்பு முயற்சிகள் காரணமாக அரசாங்கத்தின் கடன் காலப்போக்கில் குறையும் என்றும் கணித்துள்ளது. இதனை ஏப்ரல் 2024க்கான சௌத் ஏசியன் டெவெலப்மென்ட் அப்டேட்டில் உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் அப்டேட்டில், 2024-25 ஆம் ஆண்டில் தெற்காசியப் பகுதி 6.0 - 6.1% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறது. இந்தியாவின் வலுவான பொருளாதார நடவடிக்கை காரணமாக, இந்த வளர்ச்சி மற்ற வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறுகிறது. தெற்காசியாவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை அடங்கும்.
கடந்த அறிக்கையுடன் ஒப்பிடுகையில் தெற்காசியாவின் வளர்ச்சிக் கண்ணோட்டம் சற்று மேம்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. ஏனென்றால், இந்தியாவின் முதலீட்டு வளர்ச்சி சற்று மேல்நோக்கி இருப்பதால், பாகிஸ்தானும் இலங்கையும் கடந்த ஆண்டு மந்தநிலையில் இருந்து எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டு வருகின்றன என்றும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications