உலகிலேயே முதல் நாடாக எல் சால்வடோர் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பிட்காயினை நாடாளுமன்ற ஒப்புதல் உடன் நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. இதை நடைமுறைப்படுத்த எல் சால்வடோர் நாடு உலக வங்கியிடம் ஒப்புதலும், உதவிகளையும் கேட்டது.
இதற்கு உலக வங்கி பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பரிமாற்றத்தில் பாதிப்பு மட்டும் அல்லாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகும் என்று காரணம் கூறி எல் சால்வடோர் நாட்டின் கோரிக்கையை ரத்து செய்துள்ளது.

புதன்கிழமை எல் சால்வடோர் நாட்டின் நிதியமைச்சரான Alejandro Zelaya உலக வங்கியிடம் பிட்காயினைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த போதுமான தொழில்நுட்பம் மற்றும் பரிமாற்ற கட்டமைப்பு வசதிகளை அளிக்க உதவிடும் வகையில் கோரிக்கை வைத்தார்.
வளரும் நாடுகளுக்கு நிதியியல் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிடும் சர்வதேச அமைப்பான உலக வங்கி, எல் சால்வடோர் நாட்டின் கோரிக்கை உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 39000 டாலர் அளவீட்டில் இருந்து 5 சதவீதம் குறைந்து 36,748.25 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 24 மணிநேரத்தில் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications