உலக வங்கியானது நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி வளர்ச்சியினை 6.5% ஆக குறைத்துள்ளது. இது முன்னதாக 7.5% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது.
இது ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, உலக பணவீக்க நெருக்கடி என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தினை பதம் பார்த்துள்ளது.
தெற்காசிய குறித்த தனது அறிக்கையில், உயர்ந்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிக நிதிச் செலவுகளல் தனியார் முதலீட்டு வளர்ச்சியானது குறைய வாய்ப்புள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
3 முறை திருத்தம்
உலகளாவிய அளவில் தேவை குறைந்து வருவது நாட்டின் ஏற்றுமதியை பாதிக்கும் என்று சர்வதேச நிதி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 2023ம் நிதியாண்டில் இந்தியாவிற்கான ஜிடிபி வளர்ச்சியினை உலக வங்கி திருத்தம் செய்வது இது மூன்றாவது முறையாகும். இது கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் 8.7%ல் இருந்து 8% ஆக குறைத்துள்ளது. இதனை தற்போது 7.5% ஆக குறைத்ததுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கணிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை 7.2%ல் இருந்து, 7% ஆக குறைத்துள்ளது. இது உலகளாவிய அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பணவீக்க கொள்கையிலும் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதுவும் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல் ஜிடிபி
இது முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.8% ஆக இருந்த வளர்ச்சி விகிதத்தினை, 7.2% ஆக குறைக்கப்பட்டது.
வளர்ச்சி விகிதம்
இதே ரியல் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 13.5% வளர்ச்சி விகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய லெவலை விட 3.8% அளவு ஏற்ற கண்டுள்ளது. இது நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், முதலீட்டு தேவையும் அதிகரித்து வருகின்றது.


Click it and Unblock the Notifications