உலக செஸ் சாம்பியன் குகேஷ்-ன் மறுபக்கம்.. வேலையை விட்ட தந்தை.. குடும்ப பொறுப்பை ஏற்ற தாய்..!

வாழ்க்கையில் நமக்கென ஒரு கனவு இருக்க வேண்டும். அந்த கனவை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இதற்கு உதாரணமாக மாறி இருக்கிறார் உலக செஸ் சாம்பியன் குகேஷ்.

இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவுக்கே புகழ் பெற்று தந்திருக்கிறார். அவருக்கு அவ்வளவு எளிதாக இந்த வெற்றி கிடைத்துவிடவில்லை. இந்த ஒரு தருணத்திற்காக குகேஷும் அவருடைய குடும்பத்தினரும் பலவற்றை தியாகம் செய்துள்ளனர். குகேஷூக்கு 7 வயதாகும் போதே செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவு உண்டானது. அதை தன்னுடைய பெற்றோரிடம் கூட பெற்றோரும் அவரை இந்த துறையில் ஊக்குவித்தனர்.

உலக செஸ் சாம்பியன் குகேஷ்-ன் மறுபக்கம்.. வேலையை விட்ட தந்தை.. குடும்ப பொறுப்பை ஏற்ற தாய்..!

பெற்றோர் அவர் மீது வைத்த நம்பிக்கையும் குகேஷ் தன் மீது வைத்த நம்பிக்கையும் தற்போது சாத்தியமாகி உள்ளது. 18 வயதிலேயே இளம் செஸ் உலக சாம்பியன் என்ற பெருமையை பெற்றுத் தந்துள்ளார் குகேஷ். "ஏழு வயதில் செஸ் விளையாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது இருந்தே இந்த தருணத்திற்காக தான் நான் காத்திருந்தேன் என தெரிவித்துள்ள குகேஷ் அந்த சமயத்தில் இது என்னை பொருத்தவரை பெரும் கனவாக இருந்தது என கூறியுள்ளார்".

குகேஷ் இந்த உச்சத்தை அடைவதற்கு அவர் மட்டுமல்ல அவரது குடும்பத்தினரே பல்வேறு விஷயங்களை தியாகம் செய்ய வேண்டி இருந்தது. அவரது தந்தை ரஜினிகாந்த் ஒரு மருத்துவர். காது , மூக்கு, தொண்டை பிரிவில் அறுவை சிகிச்சை நிபுணர். குகேஷை செஸ் போட்டிக்காகவும் ஸ்பான்சர்ஷிப் பெறவும் பல இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டிய சூழல். எனவே ரஜினிகாந்த் தன்னுடைய மகனின் கனவுக்காக வேலையையே விட்டுவிட்டார்.

குகேஷின் தாயார் ஒரு மைக்ரோ பயாலஜிஸ்ட். குடும்ப பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டார். தன் ஒருவனுடைய கனவுக்காக குடும்பமே பல்வேறு நிதி ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்கிறார் குகேஷ்.

சிறுவயதில் இந்த கஷ்டத்தை எல்லாம் தான் உணரவில்லை என கூறும் குகேஷ், 2017 - 2018 ஆம் ஆண்டில் எனக்கு ஸ்பான்சர் செய்வதற்கு கூட என்னுடைய பெற்றோரிடம் பணம் இல்லை என் பெற்றோரின் நண்பர்களே அந்த சமயத்தில் பணம் தந்து உதவி செய்தனர் என்னுடைய பெற்றோர் நான் பல்வேறு போட்டிகளில் சென்று விளையாட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய வாழ்க்கை முறைகளிலேயே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து செலவினங்களை குறைத்துக் கொண்டனர் என கூறுகிறார்.

2013ம் ஆண்டிலிருந்து தான் இவர் செஸ் பயிற்சிக்காக செல்ல தொடங்கினார். வாரத்தில் மூன்று நாட்கள் தலா ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்புகள் இருந்தன. அதே 2013 ஆம் ஆண்டில் தான் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார்.

2017 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட குகேஷ் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார். இவர் ஒன்பது வயதுக்குட்பட்ட ஆசிய பள்ளி சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்ட உலக இளைய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் .

செஸ்ஸில் தீவிர ஆர்வம் இருந்ததால் அவருடைய பெற்றோர் முழு நேர பள்ளிக்கு செல்வதை கூட நிறுத்திவிட்டு முழுக்க முழுக்க செஸ் போட்டியிலேயே கவனம் செலுத்த வைத்தனர். இதனால் அவர் நான்காவது வகுப்பிலிருந்து முழுநேர வகுப்புக்கே செல்லவில்லை.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+