உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் உலக செஸ் சாம்பியன் சாதனை மன்னன் டி குகேஷ் தற்போது அவர் பெற்ற பரிசுத் தொகைக்காக ஐபிஎல் கிரிக்கெட்டின் தோனி சம்பளத்திற்கு இணையாக வரி செலுத்துகிறார். ஆம், வெறும் 18 வயதில், இந்திய செஸ் வீரர் குகேஷ் டி, உலக செஸ் சாம்பியனான இளம் வீரர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மூத்த வீரர் எம்.எஸ். தோனியின் வரவிருக்கும் சீசனுக்கான மொத்த ஐபிஎல் சம்பளத்தை விட அதிக வரிச் சுமை ரூ 4.67 கோடியைக் அளவிற்கு வருகிறது.
சிங்கப்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனுக்கு எதிராக வெற்றி பெற்றார். இது உலகின் மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது. இது இந்தியாவின் இரண்டாவது உலக சாம்பியன், மற்றும் முதலாவது இளம் வயது சாம்பியன் என்ற பட்டத்தை பெற்றார்.

இதற்கிடையில், இந்த வெற்றியின் மூலம் குகேஷ் மிகப்பெரிய வரியை செலுத்த உள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் மூலம் அவர் பெற்ற வருமானம் ரூ. 11.34 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, குகேஷின் வருமான வரிப் பொறுப்பான ரூ. 4.67 கோடி செலுத்த வேண்டும். இது தற்போதைய வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்காக எம்.எஸ். தோனியின் சம்பளம் ஆகும். அவருடைய சம்பளம் வரவிருக்கும் ஐபிஎல்-ல் ரூ. 4 கோடி ஆகும். இது குகேஷின் வரியை விட அதிகமாகும். இந்தியாவில் ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரி விதிக்கப்படுகிறது.
ரூ. 5 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு, 37% வரை கூடுதல் கூடுதல் கட்டணம், 4% சுகாதாரம் மற்றும் கல்வி வரியுடன் சேர்த்து, 42%க்கும் அதிகமான வரி விகிதங்கள் விதிக்கப்படுகிறது.குகேஷின் ரூ. 11.34 கோடியில் அவரது மூன்று போட்டிகளில் வென்ற ரூ. 5.04 கோடியும் அடங்கும். மீதமுள்ளவை FIDE விதிமுறைகளின்படி மொத்தப் பரிசுத் தொகையான ரூ. 21 கோடியிலிருந்து பிரிக்கப்பட்டது.
இதுகுறித்து உலக சாம்பியன் குகேஷ் தெரிவிக்கையில், செஸ் ஒருபோதும் பணத்தைப் பற்றியது அல்ல, ஆனால் ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை பற்றிய என்றும், தனிப்பட்ட முறையில், நான் செஸ் விளையாடுவதற்கு பணம் காரணம் அல்ல என்றும் கூறினார். மேலும், அவர் ஒரு மல்டி மில்லியனர் என்று கேட்கப்பட்டதற்கு, இதற்கு அதிக அர்த்தம் உள்ளது. நான் செஸ் விளையாட்டில் நுழைந்தபோது, எங்களது குடும்பம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. எனது பெற்றோர்கள் பொருளாதார ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் கஷ்டப்பட்டு வந்ததாகவும், இப்போது, நாங்கள் மிகவும் வசதியாக இருக்கிறோம் என்றும், பெற்றோர்கள் அந்த விஷயங்களைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications