சீனாவினை விடாமல் துரத்தும் நாடுகள்.. லிஸ்டில் இந்தியா, அமெரிக்கா உள்பட பலர்.. உருவாகும் மோதல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்று உலகமே அல்லோல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்று பல நாடுகள் கூறி வருகின்றன.

 

ஏன் இன்னும் அப்பட்டமாக சொல்லவேண்டுமானால் கொரோனா வைரஸைப் பரப்பியதற்காக, தங்களுக்கு 130 பில்லியன் ஐரோப்பிய டாலர்களை சீனா வழங்க வேண்டும் என்று ஜெர்மனி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதே மறுபுறம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சீனா நினைத்திருந்தால் கொரோனாவை தடுத்திருக்கலாம். மேலும் கொரோனா வேண்டுமென்றே பரப்பப்பட்டிருக்கலாம். இதற்காக தனி விசாரணை குழுவினை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

இப்படி ஒவ்வொரு நாடுகளும் தங்கள் கடமைக்கு புலம்பி தள்ளுகின்றன. என்ன சொல்லி என்ன பயன், இன்று உலகம் முழுக்க சுமார் 24 லட்சத்தினை தொட்டுள்ளது பாதிப்பு. இதே பலி எண்ணிக்கையும் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இப்படியாக உலக நாடுகளையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக தோன்றிய சீனாவினை விட்டு முற்றிலும் துறந்துள்ளது தான் இன்று பலரின் சந்தேகமாக உள்ளது.

சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறதா?

சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறதா?

இன்னும் அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக சீனா பழைய நிலைக்கு திரும்பி, தற்போது உலக நாடுகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் தன் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளது. உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிறுவனங்களை தனக்கு சாதகமாக சீனா பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
 

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

இதனால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் முக்கிய துறைகளில் அன்னிய முதலீடுகள் குறித்த விதிகளை கடுமையாக்கி வருகின்றன. மேலும் அவற்றின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் அதனை சாதகமாக பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாகவும் அவை அமைந்துள்ளன.

எப்படி முதலீடு செய்கிறது?

எப்படி முதலீடு செய்கிறது?

உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகளும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் பொருளாதாரத்தினை இழந்து தவிக்கும் நிலையில், சீனா மட்டும் அதன் தாக்கம் இல்லாமல் உலக நாடுகளில் முதலீடு செய்வது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவே சீனாவின் மீதான சந்தேகத்தினை அதிகரித்துள்ளது எனலாம்.

 ஐரோப்பா ஒன்றியம்

ஐரோப்பா ஒன்றியம்

கடந்த மார்ச் 25 அன்றே ஐரோப்பிய ஆணையம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அது அதன் உறுப்பு நாடுகளுக்கு சுகாதார திறன்களைப் பெறுவதற்கான முயற்சிகளை அதிகரிக்கும் அபாயத்தினை அது எச்சரித்தது. அதாவது அன்னிய நேரடி முதலீடு வழியாக ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற தொடர்புடையவற்றை எச்சரித்தது. இது சுகாதாரம் மட்டும் அல்ல அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டது.

ஆக இப்படியாக பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையை பயன்படுத்தி நிறுவங்களின் பங்குகள் மீது சீனா முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

 ஜெர்மனி என்ன சொல்கிறது?

ஜெர்மனி என்ன சொல்கிறது?

ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளின் முதலீட்டாளர்களால் தேவையற்ற கையகப்படுத்தலில் இருந்து, உள்நாட்டு நிறுவனங்களை காப்பாற்ற பாதுகாப்பு விதிகளை கடுமையாக்குவதற்கு ஜெர்மனியும் கடந்த ஏப்ரல் 8 அன்று ஒப்புக் கொண்டது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் ஜெர்மனி, கொரோனா வைரஸினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை சாதகமாக வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு, கையகப்படுத்தலில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்க ஒப்புக் கொண்டது.

ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளின் முதலீட்டாளர்களால் தேவையற்ற கையகப்படுத்தலில் இருந்து, உள்நாட்டு நிறுவனங்களை காப்பாற்ற பாதுகாப்பு விதிகளை கடுமையாக்குவதற்கு ஜெர்மனியும் கடந்த ஏப்ரல் 8 அன்று ஒப்புக் கொண்டது.
மேலும் நாங்கள் எங்கள் விதிகளை அமல்படுத்தப்போகிறோம். இதன் மூலம் எங்களது முக்கியமான உள்கட்டமைப்பினை முன்பை விட பாதுகாப்பாக எங்களால் பாதுகாக்க முடியும் என்றும் ஜெர்மனியின் பொருளாதார அமைச்சர் பீட்டர் ஆல்ட்மேயர் பேர்லினில் கூறியிருந்தார்.

ஸ்பெயின் என்ன சொல்கிறது?

ஸ்பெயின் என்ன சொல்கிறது?

கடந்த மார்ச் 17 அன்று ஸ்பெயின் அரசு 2003 சட்டத்தினை திருத்தும் ஒரு ஆணையை இயற்றியது. இது எந்தவொரு அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்திற்கும் முன் அரசாங்கம் அங்கீகாரத்தினைப் பெறுவது கட்டாயமாக்குகிறது. ஆக ஸ்பெயினிலும் நிறுவனத்தில் பங்குகளை முதலீடு செய்வது கடுமையாக்கப்பட்டுள்ளது.

இத்தாலி என்ன சொல்கிறது?

இத்தாலி என்ன சொல்கிறது?

கடந்த ஏப்ரல் 8 அன்று இத்தாலியும் Golden Powers Law' என்ற விதிகளை கடுமையாக்கியது. ஆக இதன் மூலம் அங்கும் அன்னிய நேரடி முதலீடு செய்வது கடுமையாகியுள்ளது. இந்த சட்டம் குறிப்பாக போக்குவரத்து, நிதித்துறை மற்றும் தரவு சேமிப்பு உள்ளடக்கிய முக்கிய துறைகளை கட்டுப்படுத்துவதாகும்.

இத்தாலியில் நிலவி வரும் துன்பகரமான நிலைக்கு மத்தியில் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெளி நாட்டு நிறுவனங்கள் நுழையக்கூடும் என்ற எண்ணத்தில் இந்த சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலியில் நிலவி வரும் துன்பகரமான நிலைக்கு மத்தியில் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெளி நாட்டு நிறுவனங்கள் நுழையக்கூடும் என்ற எண்ணத்தில் இந்த சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

என்ன சொல்கிறது ஆஸ்திரேலியா

என்ன சொல்கிறது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவும் கொரோனா நெருக்கடியின் மத்தியில் தங்களது மூலோபாய சொத்துகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடும் என்றும் கருதியது. இதனால் குறைந்த விலைக்கு மத்தியில் தங்களது சொத்துகள் விற்கப்படலாம் என்றுக் கருதியது. இதனால் கடந்த மார்ச் 30 அன்றே தற்காலிகமாக அன்னிய நேரடி முதலீடு குறித்த கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.

 இந்த லிஸ்டில் கனடாவும் உண்டா?

இந்த லிஸ்டில் கனடாவும் உண்டா?

கடந்த ஏப்ரல் 18 அன்று கனடாவும் அன்னிய நேரடி முதலீடுகள் குறித்த கொள்கைகளை கடுமையாக்கியது. கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்து வரும் இந்த நிலையில், பொது சுகாதாரம் அல்லது முக்கியமான விநியோக சங்கிலிகள் தொடர்பான நிறுவனங்களில் அன்னிய முதலீடுகள் பற்றி ஆராய்வது என பல விதங்களில் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதோடு ஆராய்ந்தும் வருகிறது.

 லண்டனுமா?

லண்டனுமா?

இங்கிலாந்து அரசும் சில கடுமையான விதிகளை கட்டுப்படுத்தியுள்ளது. குறிப்பாக இராணுவம், கணினி மென்பொருள், குவாண்டம் தொழில் துறைகளை கையகப்படுத்துதல்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆக இங்கிலாந்திலும் எந்தவொரு முதலீடும் செய்யப்படும்போதும் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 வல்லரசு அமெரிக்கா என்ன சொல்கிறது?

வல்லரசு அமெரிக்கா என்ன சொல்கிறது?

அமெரிக்காவின் அன்னிய முதலீடுகளுக்கான குழு (CFIUS), தற்போது தேசிய பாதுகாப்பு அடிப்படையில், கையகப்படுத்தல்களை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக இப்படியாக உலக நாடுகள் பலவும் தங்களது பாதுகாப்பு கருது பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 லிஸ்டில் இந்தியாவும் உண்டு பாஸ்

லிஸ்டில் இந்தியாவும் உண்டு பாஸ்

உலக நாடுகளே இப்படி பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் இந்தியா மட்டும் சும்மா இருந்து விடுமா என்ன? கடந்த ஏப்ரல் 17 அன்று அன்னிய நேரடி முதலீட்டு (Foreign Direct Investment) வரைமுறைகளில் சில கடுமையான கட்டுப்பாடுகளினை கொண்டு வர மதிப்பாய்வு செய்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இதனை அன்னிய நேரடி முதலீடு விதிகளின் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள எந்த வெளிநாடுகளும், நேரடி முதலீடும் செய்ய முடியாது என்றும், மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே முதலீடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் இனி சீனா நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளுக்கு, மத்திய அரசிடம் அனுமதி வாங்கித் தான் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World countries start to fight China’s hostile takeovers amid pandemic

World countries start to fight China’s hostile takeovers amid pandemic, particularly Indian government has mandated that all investments from neighbouring countries, including China, would now require government approval.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X