கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இந்த முறை இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும், பிரம்மாண்ட ஏற்பாடுகள் உடனும் நடக்க உள்ளது. இந்திய மக்களுக்கு World Cup 2023 போட்டிகளை கண்டு ரசிக்க பெரும்பாலான போட்டிகள் விடுமுறை நாட்களில் வைக்கப்பட்டு உள்ளது. இதிலும் குறிப்பாக தென்னிந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க முதல் இந்திய போட்டியை சென்னையில் நடத்தப்பட உள்ளது.
World Cup 2023 போட்டிகளை இந்திய அணியில் முதல் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 8ஆம் தேதி இந்தியா Vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு மத்தியில் நடக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 15-ம் தேதி நடக்கிறது.

இந்தியாவில் இருப்பவர்கள் World Cup 2023 போட்டிகளின் அனைத்து 34 போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-ன் SS1 சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. டிஜிட்டல் எனில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அப்போ வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும், தமிழர்களும் எப்படி World Cup 2023 போட்டிகளை பார்ப்பது..?
Australia-வில் வாழும் இந்தியர்களும், தமிழர்களும் Fox Sports சேனலில் கிரிக்கெட் உலகக்கோப்பையின் அனைத்து போட்டிகளை பார்க்க முடியும்.
இதேபோல் America - ESPN+-ல் அனைத்து போட்டிகளையும், Willow டிவியில் சில முக்கிய போட்டிகளை மட்டுமே காண மூடியும்.
பிரிட்டன் மற்றும் அயர்லாந்து - Sky Sports
ஸ்ரீலங்கா - மகாராஜா டிவி
சிங்கப்பூர் - ஸ்டார்ஹப்
பாகிஸ்தான் - PTV, ARY
நேபாள் - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் / Net TV
மலேசியா - MEASAT
மாலத்தீவு, பூட்டான், பங்களாதேஷ் - Star Sports
கனடா - Hotstar மற்றும் Willow TV
உலகக்கோப்பை போட்டிகள் இந்த முறை இந்தியாவில் நடக்கும் காரணத்தால் பருவ நிலை முதல் பிட்ச் கையாளும் அளவு வரையில் அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதை விட முக்கியமாக ஐபில் போட்டிகள் முடிந்து சில மாதங்களிலேயே உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கும் காரணத்தால் கூடுதல் அனுபவம் கொண்டு உள்ளோம். இந்த உலகக்கோப்பை போட்டியில் தற்போதைய நிலவரத்தில் வெற்றிப்பெற யாருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications