ஐபில் முடிந்த கையோடு கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி நடத்தும் 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை கொளுத்திப்போட்டு உள்ளது.
மும்பையில் இன்று வெளியான அறிவிப்பின் படி அக்டோபர் 05 ஆம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடந்த அதே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க உள்ளது. இந்தியாவின் முதல் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 8ஆம் தேதி நடக்கிறது.

அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி மன்னிக்கவும் விளையாட்டு போர், அகமதாபாத்தில் அக்டோபர் 15-ம் தேதி மீண்டும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் நிலையில், எட்டு அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன, இரண்டு அணிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜிம்பாப்வேயில் ஜூலை 9ஆம் தேதி முடிவடையும் தகுதிச் சுற்றுப் போட்டியின் முடிவில் எந்த நாடுகள் பங்கேற்க உள்ளது என தீர்மானிக்கப்படும்.
ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் இடம்பெறுவதாலும், கிரிக்கெட் மோகம் உலக நாடுகளிலும் அதிகரித்துள்ள காரணத்தால் இந்த ஆண்டு ஸ்பான்சர் செய்ய பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டு உள்ளது. இந்த போட்டியில் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட முதலீடு நிறுவனங்களின் பட்டியல்.
MRF டயர்ஸ், புக்கிங்.காம், பைஜூஸ், பார்த்பே, ஆராம்கோ, எமிரேட்ஸ், BIRA, பாலிகேப், தம்ப்ஸ் அப், அப்ஸ்டாக், நிசான், NIUM, OPPO, DP World, ராயல் ஸ்டேக், ட்ரீம் 11, ஜேகப்ஸ் கிரீக், Fan Craze, Tyka ஆகியவை முக்கிய பார்ட்னர் ஆக உள்ளனர்.


Click it and Unblock the Notifications