கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா-வின் போட்டிகள் பெரும்பாலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.
செமி பைனல்-க்கு முன்பு ஒவ்வொரு அணியும் 9 போட்டிகளில் விளையாடும், இதில் இந்தியா விளையாடும் 9 போட்டிகளில் 5 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை, 1 போட்டி சனிக்கிழமை, 1 போட்டி புதன்கிழமை, 2 போட்டி வியாழக்கிழமை நடக்கிறது. வாரத்தின் முதல் 2 நாட்களில் மற்றும் வெள்ளிக்கிழமை ஒரு போட்டி கூட இல்லை.

வெள்ளிக்கிழமை இந்தியா விளையாடும் போட்டிகள் இல்லாமல் இருக்க முக்கிய காரணம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்காக பயணம் செய்ய ஏதுவாக நேரத்தை ஒதுக்கீடு செய்ய இந்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டு இருக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை - அக்டோபர் 8 - இந்தியா Vs ஆஸ்திரேலியா - சென்னை
புதன்கிழமை - அக்டோபர் 11 - இந்தியா Vs ஆப்கானிஸ்தான் - டெல்லி
ஞாயிற்றுக்கிழமை - அக்டோபர் 15 - இந்தியா பாகிஸ்தான் - அகமதாபாத்
வியாழக்கிழமை - அக்டோபர் 19 - இந்தியா பங்களாதேஷ் - புனே
ஞாயிற்றுக்கிழமை - அக்டோபர் 22 - இந்தியா நியூசிலாந்து - தர்மசாலா
ஞாயிற்றுக்கிழமை - அக்டோபர் 29 - இந்தியா இங்கிலாந்து - லக்னோ
வியாழக்கிழமை - நவம்பர் 2 - இந்தியா - குவாலிபையர் 2 - மும்பை
ஞாயிற்றுக்கிழமை - நவம்பர் 5 - இந்தியா - தென்னாப்பரிக்கா - கொல்கத்தா
சனிக்கிழமை - நவம்பர் 11 - இந்தியா குவாலிபையர் 1 - பெங்களூர்
ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் நிலையில், எட்டு அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன, இரண்டு அணிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜிம்பாப்வேயில் ஜூலை 9ஆம் தேதி முடிவடையும் தகுதிச் சுற்றுப் போட்டியின் முடிவில் எந்த நாடுகள் பங்கேற்க உள்ளது என தீர்மானிக்கப்படும். இந்த இரு அணிகள் தான் குவாலிபையர் 1, குவாலிபையர் 2.
இந்தியா விளையாடும் 9 போட்டிகளில் 5 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை, 1 போட்டி சனிக்கிழமை வைக்க முக்கியமான காரணம் அதிகப்படியான ரசிகர்களை ஸ்டேடியத்திற்கு ஈர்க்கவும், டிஜிட்டல் மற்றும் டிவி-யில் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்க்கவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications