ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடக்க உள்ள நிலையில் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத்-க்கு நேரில் சென்று மேட்ச் பார்க்க உலகக் கோப்பை அட்டவணை வெளியான நாளில் இருந்து பலரும் திட்டமிட்டு வருகின்றனர்.
ஆனால் பெரும் பகுதி மக்கள் கடைசி நேரத்தில் அவசர அவசரமாகச் செல்வோர் தான் அதிகம். ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டிகள் இந்தியாவில் நடப்பது, அதிலும் பைனல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் காரணத்தால் மேட்ச்-ஐ நேரில் சென்று பார்க்கத் திட்டமிடுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால் மேக் மை டிரிப், யாத்ரா போன்ற விமான டிக்கெட் புக்கிங் தளத்தில் கடந்த ஒரு வாரமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அகமதாபாத் செல்ல சர்ச் செய்தோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
2வது அரையிறுதி போட்டியில் பலரும் எதிர்பார்த்த படியே தென்னாப்பிரிக்கா அணி சொதப்பி ஆஸ்திரேலியா அணி வென்ற நிலையில், இறுதி போட்டி ஆரம்பம் முதல் விறுவிறுப்பாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டிமாண்ட் அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளது.
இது ஒருபக்கம் இருக்க விமான டிக்கெட் விலை 300 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து விமானப் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்குப் போட்டி நடக்கும் வேளையில் இந்தப் போட்டியை காண சென்னையில் இருந்து சனிக்கிழமை கிளம்பி அகமதாபாத் சென்று திங்கட்கிழமை சென்னை திரும்ப விமான டிக்கெட் விலை மட்டும் என்ன தெரியுமா..?
சென்னையில் இருந்து அகமதாபாத்-க்கு நவம்பர் 18ஆம் தேதி செல்ல 18000 ரூபாய் முதல் 38000 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது, டிக்கெட் விலை துவங்குகிறது. இதேபோல் திங்கட்கிழமை சென்னை திரும்பி வர ஆரம்பக் கட்டணமே 19000 ரூபாயில் இருந்து 48000 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.
எப்படிப் பார்த்தாலும் குறைந்த பட்சம் 37000 ரூபாயில் இருந்து அதிகப்படியாக 86000 ரூபாயை விமான டிக்கெட்-க்கு மட்டுமே ஒருவர் செலவு செய்ய வேண்டும். இதோடு நிற்காது சனிக்கிழமை இரவு, ஞாயிற்றுக்கிழமை இரவு என இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்க வேண்டும்.
அகமதாபாத்தில் தற்போதைய நிலவரத்தின் படி ஒரு இரவுக்கு நடுத்தர ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 10000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது. இதுவே 3- 4 ஸ்டார் என்றால் ஒரு நாளுக்கே 1 லட்சம் ரூபாய் அளவில் வசூலிக்கப்படுகிறது, 5 ஸ்டார் ஹோட்டல் என்றால் கேட்கவே வேண்டாம்..
இப்படி இந்தியா - ஆஸ்திரேலியா போதும் உலகக் கோப்பை போட்டியை பார்க்க செல்லும் ஒருவர் போக்குவரத்து, தங்குமிடத்திற்கு மட்டுமே கிட்டதட்ட 2 மாத சம்பளத்தைச் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதைவிட முக்கியமாக டிக்கெட் உள்ளது.


Click it and Unblock the Notifications