சீனாவுக்கு பின்னடைவு.. இந்தியாவுக்கு ஜாக்பாட்.. 2022ல் நடக்கப்போகும் முக்கிய மாற்றம்..!

கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பின்பு சீனா போன்று உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகம் சார்ந்து இருக்கும் பல நாடுகள் தொடர்ந்து வளர்ச்சியில் இருக்கும் இதேவேளையில் சேவைத்துறை மற்றும் MSME துறையைச் சார்ந்து இருக்கும் நாடுகள் வளர்ச்சி அடைந்தாலும் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யவில்லை.

கொரோனா தொற்றுக்குப் பின்பு உலக நாடுகளில் உள்நாட்டு ரீடைல் வர்த்தகம் சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு, ஒமிக்ரான் தொற்று அச்சம் எனப் பல பிரச்சனைகள் இருந்தாலும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது.

100 டிரில்லியன் டாலர்

100 டிரில்லியன் டாலர்

இதன் மூலம் 2022ல் உலக நாடுகளின் மொத்த பொருளாதார மதிப்பு வரலாற்றிலேயே முதல் முறையாக 100 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தொடும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்த அதிரடி வளர்ச்சியில் சீனாவின் கனவுத் திட்டத்தில் பின்னடைவும், இந்தியாவுக்கும் சாதகமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

அமெரிக்கா - சீனா

அமெரிக்கா - சீனா

 

கொரோனா தொற்றுக்குப் பின்பு வல்லரசு நாடுகள் மத்தியில் முதல் இடத்தை யார் பிடிப்பது என்பதில் மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது. இதன் அடிப்படையில் உலகப் பொருளாதார லீக் டேபிள் ரிப்போர்ட் டாலர் மதிப்பில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைச் சீனா 2028ல் பிடிக்கும் எனக் கணித்திருந்தது.

சீனாவுக்குப் பின்னடைவு

சீனாவுக்குப் பின்னடைவு

தற்போது பிரிட்டன் கன்சல்டன்சியான Cebr சீனா அமெரிக்காவை 2030ல் தான் முந்தும் எனக் கணித்துள்ளது, 2 வருடம் என்பது சீனாவிற்குப் பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இது உலக நாடுகளின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு 2022ல் 100 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தொடுவதால் ஏற்படும் மாற்றம் எனத் தெரிகிறது.

இந்தியாவுக்கு ஜாக்பாட்

இந்தியாவுக்கு ஜாக்பாட்

இதேவேளையில் பிரிட்டன் கன்சல்டன்சியான Cebr 2023ஆம் ஆண்டுக்குள் இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளைப் பின்னுக்குத்தள்ளி மீண்டும் உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் எனக் கணித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 2 வருடத்தில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என உறுதியாகியுள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் உலக நாடுகள் எப்படிப் பணவீக்கத்தையும், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கப்போகிறது என்பது தான் பெரும் சவால் எனவும் பிரிட்டன் கன்சல்டன்சியான Cebr தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜெர்மனி, இந்தோனேசியா

ஜெர்மனி, இந்தோனேசியா

மேலும் Cebr தனது அறிக்கையில், 2033க்குள் பொருளாதார உற்பத்தி அளவீட்டில் ஜப்பான் நாட்டை ஜெர்மனி முந்தும் என்றும், 2036க்குள் ரஷ்யா டாப் 10 பொருளாதார நாடுகள் பட்டியலுக்குள் இடம் பெறும் என்றும், 2034க்குள் இந்தோனேசியா டாப் 10 பொருளாதார நாடுகள் பட்டியலில் 9வது இடத்தைப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+