புத்தாண்டு துவங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பலரும் பல கனவுகள் உடன் எதிர்பார்ப்புகள் உடன் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் சர்வதேச அமைப்புகள் அதிர்ச்சியை அளித்து உள்ளது.
சென்டர் ஆப் எக்னாமிக்ஸ் அண்ட் பிஸ்னஸ் ரிசர்ச் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வின் படி 2023 ஆம் ஆண்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் அதிகரித்த வட்டி விகிதத்தின் மூலம் உலக நாடுகள் அதிகளவில் பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷனை எதிர்கொள்ளும்.
இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை
ஏற்கனவே ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரையில் மக்கள் செலவிடுவதையும் பெரிய அளவில் குறைத்துள்ள நிலையில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி சந்தைகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
சர்வதேச பொருளாதாரம்
2022 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் முதல் முறையாக 100 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தாண்டியது, ஆனால் 2023ல் இது அப்படியே நின்று விடும் எனக் கொள்கை வகுப்பாளர்கள் கணித்துள்ளனர்.
இழப்பு, தேக்கம்
2022 ஆம் ஆண்டில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 14 டிரில்லியன் டாலர் அளவிலான முதலீட்டு மதிப்பீட்டை இழந்துள்ள நிலையில் 2023 ல் ரெசிஷன் மூலம் இதே 100 டிரில்லியன் டாலர் அளவீட்டில் தேக்கம் அடையும் எனச் சென்டர் ஆப் எக்னாமிக்ஸ் அண்ட் பிஸ்னஸ் ரிசர்ச் அமைப்பு தனது வருடாந்திர World Economic League Table அறிக்கையில் கணித்துள்ளது.
பணவீக்கம்
மேலும் இந்த அறிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இன்னும் மீண்டு வரவில்லை எனத் தெரிவித்திருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிலும் மத்திய வங்கி தனது போராட்டத்தைத் தொடரும் எனக் கணித்துள்ளது. இதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையை அடையும் எனக் கணித்துள்ளது.
ஐஎம்எப்
சமீபத்தில் ஐஎம்எப் வெளியிட்ட கணிப்பில் உலகில் உலகில் 3ல் ஒரு பகுதி நாடுகளின் பொருளாதாரம் மைனஸ்-ல் செல்லும் என்றும், 2023 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் 2 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே வளர்ச்சி அடையும் என்ற நிலை உருவாக 25 சதவீதம் அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கணிப்புகள்
கிட்டத்தட்ட இதே கணிப்பை தான் சென்டர் ஆப் எக்னாமிக்ஸ் அண்ட் பிஸ்னஸ் ரிசர்ச் அமைப்பு கணித்துள்ளது. இதேவேளையில் சீனாவில் உருவாகியுள்ள உற்பத்தி, வர்த்தகம், கொரோனா தொற்று ஆகிய அனைத்தும் சீனாவின் அமெரிக்கப் பொருளாதாரத்தை முந்தும் கனவு நினைவாகாது எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
சீனா அமெரிக்கா
இதேவேளையில் சீனா அமெரிக்காவை 2036 ஆம் வருடம் முந்தும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது, இது முந்தைய கணிப்பைக் காட்டிலும் 6 வருடம் கூடுதலான காலகட்டமாகவும். இதேபோல் 2037ல் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் பொருளாதாரத்தில் மிகவும் அதிகத்தைக் காட்டும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பொருளாதாரம்
2035ல் இந்திய பொருளாதாரம் 10 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெறும், 2032ல் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.இதனால் 2030 வரையில் அமெரிக்கா, ஐரோப்பாவும் தான் சர்வதேச பொருளாதாரச் சந்தையை ஆட்சி செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications