சர்வதேச பொருளாதார உற்பத்தி விகிதமானது அடுத்த ஆண்டில், முதல் முறையாக 100 டிரில்லியன் டாலரை தாண்டி செல்லும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது குறித்து பிரிட்டீஸ் கன்சல்டன்ஸி நிறுவனமான செபர் (Cebr) நிறுவனம் கணித்துள்ளது. இதில் சீனா 2030ல் உலக நாடுகளில் தலை சிறந்த பொருளாதார நாடாக உருவெடுக்கும் என கணித்துள்ளது. இது முன்னதாக 2028ல் சிறந்த பொருளாதார நாடாக உருவெடுக்கும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல இந்தியா அடுத்த ஆண்டு பிரான்சையும், பின்னர் 2023ல் பிரிட்டனை முந்தி உலகின் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என செப்ர் கூறியுள்ளார்.
பணவீக்கமே பெரிய பிரச்சனை
2020ல் உலக நாடுகளின் மிகப்பெரிய பிரச்சனையே பணவீக்கமாகவும், அதனை எப்படி உலக நாடுகள் சமாளிக்கின்றன என்பதுமாகத் தான் இருந்தது. இது அமெரிக்காவில் தற்போது 6.8% என்ற அளவினை எட்டிட்யுள்ளது. இதனை விரைவில் சரிய வேண்டும். அப்படி உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், மேலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
பொருளாதார மந்த நிலை
இதனால் 2023 அல்லது 2024ல் உலக நாடுகள் தங்களை தாங்களே மந்த நிலைக்கு தயார்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கிடையில் 2033ம் ஆண்டில் ஜெர்மனி ஜப்பானினை முந்திச் செல்லலாம். 2036ம் ஆண்டில் ஜெர்மனி டாப் 10 நாடுகளில் ஒன்றாக மாறும். 2034ல் இந்தோனேசியா ஒன்பாதவது இடத்திற்கும் முன்னேறலாம் என கனித்துள்ளது.
ஓமிக்ரான் அச்சம்
மேற்கூறியவாறு பல கணிப்புகள் வெளியான வண்ணம் இருந்தாலும், உலக நாடுகள் பலவற்றிலும் ஓமிக்ரான் அச்சம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதன் காரணமாக மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சி
இதே எக்னாமிக் டைம்ஸில் வெளியானான செய்தியொன்றில் 2022 - 23ல் இந்திய பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியினை எட்டலாம். ஏற்கனவே கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்ட தொடங்கி விட்டது. ஆக நடப்பு நிதியாண்டில் மீதமிருக்கும் ஆண்டில் இன்னும் வளர்ச்சி காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டினை காட்டிலும் மூலதன் முதலீடுகள் கணிசமான் அளவு அதிகரித்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் முதலீடு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications