கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கு கீழே போகக் கூடும்.. எண்ணெய் வைக்க இடமும் இல்லாமல் போகலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னதான் கச்சா எண்ணெய் விலையானது 18 வருட சரிவில் இருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையானது இன்றளவிலும் பெரிதாக குறைந்தபாடில்லை.

ஆனால் சிஎன்என் பிசினஸில் வெளியான ஒரு செய்தியில் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்திற்கு கீழே போகக் கூடும். அதோடு கச்சா எண்ணெயை வைக்க போதிய இடமும் இருக்காது என்று வெளியாகியுள்ளது.

என்ன தான் ஆச்சு இந்த கச்சா எண்ணெய் விலைக்கு? ஏன் இப்படி படு பாதாளம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையானது அசராமல் அப்படியே உள்ளது. வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

குறைந்து வரும் தேவை

குறைந்து வரும் தேவை

உலகெங்கிலும் கொரோனாவின் கோரத் தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில், நெடுஞ்சாலைகள் பளீரென்று ஆள் நடமாட்டமோ அல்லது அதிக வாகன நடமாட்டமோ இல்லை. இதே தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் என அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன. இப்படி ஓரு நிலையில் கச்சா எண்ணெய் தேவையானது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

விலை வீழ்ச்சி

விலை வீழ்ச்சி

ஆக இப்படியாக குறைந்து வரும் எண்ணெய் தேவையானது, எண்ணெய் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே 18 வருட சரிவில் உள்ள விலையை, இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் பிரச்சனையை எண்ணெய் ஊற்றி வளர்த்துக் கொண்டுள்ளன. அமெரிக்காவும் தன் பங்கிற்கு உற்பத்தியை நிறுத்துவதாக தெரியவில்லை.

எண்ணெய் எடுத்து செல்ல இயலவில்லை

எண்ணெய் எடுத்து செல்ல இயலவில்லை

கச்சா எண்ணெய் சந்தை என்பது தற்போது தேவை குறைந்து வருகிறது என்பதை மட்டும் அல்ல, அதனை எங்கும் கொண்டு செல்ல முடியாது என்ற நிலையும் உருவாக்கி வருகிறது என்றும் நியூபெர்கரின் மூத்த எரிசக்தி ஆய்வாளர் ஜெஃப் வில் கூறியுள்ளார். ஏனெனில் தொடர்ந்து உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒருமோசமான நிலை

இது ஒருமோசமான நிலை

இந்த நிலையில், சேமிப்பு வசதிகள், சுத்திகரிப்பு நிலையங்கள், கப்பல்கள், எண்ணெய் குழாய்கள் என அனைத்தும் தனது இறுதி திறனை எட்டக்கூடும். ஏனெனில் கடந்த 1998 முதல் இப்படி ஒரு மோசமான நிலை வந்ததே இல்லை என்றும் கோல்டுமேன் சாச்சஸ் தெரிவித்துள்ளது. மேலும் சில நாடுகள் தற்போது எண்ணெய் விலையில் மேலும் யுத்தய்த்தினை உருவாக்க ஆயத்தமாகி வருகின்றன.

சிங்கில் இலக்கத்தில் விலை

சிங்கில் இலக்கத்தில் விலை

West Texas Intermediate மற்றும் Brent எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் 20 டாலர் என வர்த்தகமாகி வருகிறது என்றாலும், சில பிராந்தியங்களில் விலை ஒற்றை இலக்க எல்லைக்குள் முழ்கியுள்ளன. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் வினியோகத்துடன் ஒப்பிடும்போது, தேவையானது மிக மிக வேகமாக வீழ்ச்சி கண்டு வருகிறது.

கப்பலில் சேமிப்பு

கப்பலில் சேமிப்பு

உலகளாவிய கப்பற்படையில் சுமார் 20% மிதக்கும் சேமிப்பகமாக மாறக்கூடும் என்றும் ஜேபிசி தெரிவித்துள்ளது. ஆக ஏப்ரல் மாதத்தில் 6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் "homeless crude" ஆக இருக்ககூடும். இதுவே மே மாதத்தில் 7 மில்லியன் பேரல்களாக உயரக்கூடும். இது கச்சா எண்ணெய் விலை மேலும் சரிய வழிவகுக்கும்.

 உற்பத்தியை நிறுத்த கட்டாயப்படுத்தப்படலாம்

உற்பத்தியை நிறுத்த கட்டாயப்படுத்தப்படலாம்

ஏற்கனவே 18 வருட சரிவில் உள்ள கச்சா எண்ணெய் விலையானது. இதனால் இன்னும் குறையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து Rystad Energy கூறுகையில், எண்ணெய் உற்பத்தியாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பெரிய உற்பத்தி நிறுத்தங்களை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படலாம் . இது பழைய எண்ணெய் உற்பத்தி கிணறுகள் முதலில் தற்காலிகமாக மூடப்படலாம்.

செலவினங்கள் குறைப்பு

செலவினங்கள் குறைப்பு

அமெரிக்கா நிறுவனங்கள் கூட உற்பத்தி மற்றும் செலவினை கணக்கிடுவதாக கூறுகின்றன. உதாரணமாக Chevron (CVX) தனது செலவினை 30% குறைப்பதற்கான திட்டங்களை கடந்த வாரம் அறிவித்தது. இதே Permian நிறுவனம் தனது இலக்கில் 20% குறைக்க திட்டமிட்டுள்ளது. எனினும் நிச்சயமாக கொரோனாவால் தொற்று ஏற்படும் பலவீனமான தேவை என்றென்றும் நிலைக்காது.

விலை நிச்சயம் அதிகரிக்கும்

விலை நிச்சயம் அதிகரிக்கும்

ஏனெனில் மீண்டும் விமானங்கள் காற்றில் பறக்ககூடும். எரிபொருளை வாங்க தொடங்கும். அமெரிக்கா ஒட்டுனர்கள் மீண்டும் வேலைக்கு வரும்போது அதிக பெட் ரோல் வாங்குவார்கள். ஆனால் அந்த சமயத்தில் எண்ணெய் உற்பத்தி முன்பை போல உற்பத்தி செய்யாமல் இருக்கலாம். ஏனெனில் கிணறுகள் மூடப்படுகின்றன. ஆக அன்று எண்ணெய் பற்றாக்குறையாக மாறக்கூடும். ஆக இதன் விலை அப்போது அதிகரிக்கக் கூடும். அடுத்த ஆண்டு எண்ணெய் விலை 55 டாலர்களை விட அதிகமாக இருக்கும் என்றும் கோல்ட்மேன் சாச்ஸ் பொருட்களின் தலைவர் கெஃப்ரி கியூரி கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World may soon run out of space to store oil, Oil prices may plunge below zero

Highways are empty, planes are grounded, and factories are dark. So these are collapses oil demand. Its support Crude oil prices already slashed 18 year lows.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X