உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள், புகையிலை நிறுவனங்களின் வணிக நடைமுறைகள், புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு (WHO) உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்பதை அனுசரிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தங்களது எதிர்கால சந்ததியைப் பாதுகாக்க உலக சுகாதார அமைப்பால் உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கியமான காரணமும் உண்டு, உலக சுகாதார அமைப்பு கணக்கின் படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டின் மூலம் மரணம் அடைகின்றனர். இதில் 12 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்தாமலேயே, புகையிலை பயன்படுத்தபவர்களால் இறக்கின்றனர். இந்த நிலையில் இந்திய புகையிலை சந்தை குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்தியப் புகையிலைத் துறை மிகப் பழமையானது மற்றும் நாட்டின் சிறந்த தொழில்களில் மிகவும் செழிப்பாக இருக்கும் ஒரு துறையாகவும் உள்ளது. இதனாலேயே இந்திய புகையிலை சார்ந்த முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான லாபத்தையும் அளிக்கும் ஒரு முதலீட்டு துறையாகவும் இந்திய புகையிலை துறை உள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் புகையிலை தொழில் சார்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்து நிறுவனத்தின் வெற்றி, வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் இருந்து லாபம் பார்த்து வருகின்றனர். இந்திய புகையிலை பயன்பாட்டில் 90% க்கும் அதிகமானவை சிகரெட்டுகள் தான்.
இந்திய புகையிலை சந்தையில் சிகரெட்கள் முக்கிய இடத்தை கொண்டு இருக்கும் வேளையில் இத்துறையில் இருக்கும் டாப் நிறுவனங்கள் எது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1. ஐடிசி
2. காட்ஃப்ரே பிலிப்ஸ்
3. விஎஸ்டி இன்டஸ்ட்ரீஸ்
4. இந்திய வூட்ஸ் தயாரிப்புகள்
5. என்டிசி இண்டஸ்ட்ரீஸ்
6. கோல்டன் புகையிலை
இந்தியாவில் புகையிலை வர்த்தகம் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டது மட்டும் அல்லாமல் மத்திய மாநில அரசுகள் மக்கள் புகைபிடிப்பதைத் தடுக்க அதிகப்படியான வரிகளை உயர்த்துதல், விளம்பரங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங்கில் சுகாதார எச்சரிக்கைகள் உட்பட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும் ஒவ்வொரு காலாண்டுக்கும் சிகரெட் வர்த்தகம் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications