உலக அளவில் 10 பிசியான விமான நிலையங்கள் குறித்த பட்டியல் வந்துள்ள நிலையில் அதில் ஒரே ஒரு இந்திய நகரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலக அளவில் பிசியான 10 நகரங்கள் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் இந்திய தலைநகரம் டெல்லி மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
10 பிசியான விமான நிலையங்கள்
பிசியான விமான நிலையங்கள் குறித்து பகுப்பாய்வு செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று உலகின் 10 பரபரப்பான பிசியான விமான நிலையங்கள் குறித்த கருத்துக்கணிப்பை எடுத்து உள்ளது. அந்த அறிக்கையில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆவது இடத்தில் இருந்த டெல்லி விமான நிலையம் 4 இடங்கள் முன்னேறி தற்போது 10வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி விமான நிலையம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது டெல்லி விமான நிலையம் மிகவும் பிஸியான விமான நிலையமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மட்டுமின்றி உலகின் ஒரு சில விமான நிலையங்களும் தங்களுடைய இடத்தை முன்னோக்கியும் பின்னோக்கியும் அடைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடம் அட்லாண்டா
இந்த பட்டியலில் முதல் இடத்தில் அட்லாண்டா விமான நிலையம் இடம்பெற்று உள்ளது. இந்த நகரின் விமான நிலையம் தான் உலகின் மிகவும் பிசியான விமான நிலையம் என பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் துபாய் மற்றும் மூன்றாவது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4 லட்சம் பயணிகள்
மேலும் இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ள டெல்லி விமான நிலையத்தில் பயணிகளின் வருகை எண்ணிக்கை சராசரியாக 34 லட்சமாக உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் சர்வதேச விமான சேவைகள் தற்போது கணிசமாக மீட்சி அடைந்துள்ளதாக குறிப்பாக இந்திய விமான துறை நல்ல முறையில் மீண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பயணிகளின் வருகை
அதேபோல் லண்டன் விமான நிலையம், சிகாகோ விமான நிலையம் ஆகிய விமான நிலையங்களுக்கு பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் விமான நிலையங்களாகும் என்றும், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் பயணிகளுக்கு வசதியான விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாய் - லண்டன்
உலகின் மிக பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்று துபாய் என்றும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் ஆகியவையும் பயணிகளின் வசதிக்கு உரிய விமான நிலையமாக உள்ளது என்று அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையம்
டெல்லி தவிர மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்பட வேறு எந்த விமான நிலையமும் இந்த பட்டியலில் இடம்பெறாதது இந்தியர்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும் இனி வரும் காலங்களில் மற்ற இந்திய விமான நிலையங்களும் முதல் 10 பரபரப்பான சர்வதேச வழித்தடங்களில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மும்பை விமான நிலையத்தில் பயணிகள் வருகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் இந்த விமான நிலையமும் பிசியான விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications