உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமன், நைகா ஃபால்குனி நாயர், HCL ரோஷ்னி..!

போர்ப்ஸ் நிறுவனம் 18வது உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த வருடப் பட்டியலில் சிஇஓக்கள், நிறுவனத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்கள் எனப் பல தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் இந்திய பெண்கள் டாப் 10 பட்டியலில் வருவார்களா என எதிர்பார்க்கும் நிலையில், இந்த ஆண்டு அமெரிக்க இந்தியரும் அமெரிக்காவின் துணை அதிபருமான கமலா ஹாரிஸ் இடம்பெற்றுள்ளார்.

ஆனால் டாப் 100 பேர் பட்டியலில் 4 இந்தியர்கள் இடம்பெற்று அசத்தியுள்ளனர்.

 முதல் இடம் யாருக்கு..!

முதல் இடம் யாருக்கு..!

அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ்-ன் முன்னாள் மனைவியான மெக்கன்சி ஸ்காட் போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் 2021 பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் இதற்கு முன்பு வெளியிட்ட 17 பட்டியலில் 15 முறை முதல் இடத்தில் இருந்த முன்னாள் ஜெர்மன் நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இடத்தைத் தான் தற்போது மெக்கன்சி ஸ்காட் பெற்றுள்ளார்.

 

மெக்கென்சி ஸ்காட் இதுவரை தனது சொத்து மதிப்பில் சுமார் 8.6 பில்லியன் டாலர் பணத்தைப் பல்வேறு நல திட்டங்களுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். 2021ல் மட்டும் 2.7 பில்லியன் டாலர் கொடுத்துள்ளார்.

 

 3.3 டிரில்லியன் டாலர்

3.3 டிரில்லியன் டாலர்

2021 உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இருக்கும் பெண்கள் 3.3 டிரில்லியன் டாலர் வருமானம் மற்றும் 67 லட்ச ஊழியர்களை நிர்வாகம் அல்லது ஆதிக்கம் செலுத்து வருகின்றனர். இந்த வருட பட்டியலில் சுமார் 14 பெண் பில்லியனர்கள் இடம்பெற்று உள்ளனர்.

 167 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

167 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

மேலும் 2021 உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இருக்கும் பெண்களின் மொத்த சொத்து மதிப்பு 167 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இப்பட்டியலில் வணிகம், நிதி, ஊடகம் & பொழுதுபோக்கு, தொண்டு (Philanthropy), அரசியல் & கொள்கை மற்றும் தொழில்நுட்பம் துறை சார்ந்தவர்கள் இடம்பெற்று உள்ளனர்.

 கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்

முதல் இடத்தை மெக்கென்சி ஸ்காட் பெற்றுள்ள நிலையில், 2வது இடத்தை அமெரிக்கத் துணை அதிபரான கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான கிறிஸ்டின் லகார்ட் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். போர்ப்ஸ் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும் 5 பெண்களில் கிறிஸ்டின் லகார்ட்-ம் ஒருவர்.

 இந்தியா

இந்தியா

போர்ப்ஸ் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல் 2021ல் இந்த ஆண்டு 37வது இடத்தில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், 52 வது இடத்தில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ-வான ரோஷ்னி நாடார், 72 வது இடத்தில் பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா, 88வது இடத்தில் சமீபத்தில் ஐபிஓ-வில் கலக்கிய நைகா நிறுவனத்தின் சிஇஓ ஃபால்குனி நாயர் ஆகியோர் உள்ளனர்.

 உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்

உலகளவில் தற்போது ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி வரும் வேளையில் போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல் பலரின் சாதனைகளையும் வளர்ச்சியையும் சர்வதேச அளவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது மட்டும் அல்லாமல் பல பெண்களுக்கு இது உத்வேகமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+