உலகளவில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களைக் கலங்கடித்துள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என்பது 90 சதவீதம் உறுதியாகியுள்ளது, சொல்லப்போனால் பல நாடுகள் ஏற்கனவே ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது.
இந்த நிலையில் பணவீக்க அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டியைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதலீட்டு நிறுவனங்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. ஏன் தெரியுமா..?
நார்வே சவ்ரின் வெல்த் பண்ட்
உலகின் மிகப்பெரிய வெல்த் பண்ட் நிறுவனமாக விளங்கும் நார்வே சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் மட்டும் 43 பில்லியன் டாலர் நார்வே நாட்டின் நாணய மதிப்பின் படி 449 பில்லியன் குரோன் அளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளது.
-4.4 சரிவு
இந்தச் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான தடுமாற்றம் மற்றும் வட்டி விகித உயர்வும் தான் எனத் தெரிவித்துள்ளது. இக்காலாண்டில் நார்வே சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனம் -4.4 சரிவை பதிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
1.68 டிரில்லியன் குரோன் இழப்பு
2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 1.68 டிரில்லியன் குரோன் அளவிலான இழப்பைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. நார்வே சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனத்தில் தான் நார்வே நாட்டின் எண்ணெய் துறை லாபத்தை முதலீடு செய்கிறது.
நார்வே
இதே காலகட்டத்தில் நார்வே நாட்டின் நாணயமான குரோனர் மதிப்பு உலகின் முன்னணி நாணயங்களுக்கு எதிராகச் சரிவைச் சந்தித்தது. ஒரு நார்வே குரோன் மதிப்பு, இந்திய ரூபாயில் 7.89 ரூபாயாகும்.
முதலீட்டு நிறுவனங்கள்
ஐரோப்பா, பிரிட்டன், ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகளில் பொதுவாகவே பென்ச்மார்க் வட்டி மிகவும் குறைவாக இருக்கும், இதைப் பயன்படுத்தி முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் கடன் வாங்கி உலகளவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சர்வதேச பங்குச்சந்தை, தங்கம், அரசு பத்திரம், நிறுவனப் பங்குகளில் கண்மூடித்தனமாக முதலீடு செய்து பெரிய லாபத்தைப் பார்த்து வந்தது.
கொரோனா, ரஷ்யா - உக்ரைன் போர்
இந்தப் பாதையில் முதல் தடை கொரோனா தொற்று, உலகளவில் பாதிப்பு உருவான காரணத்தால் சில நாடுகளில் மட்டும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியது, இதைத் தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் கச்சா எண்ணெய் முதல் அனைத்து உற்பத்தி பொருட்களும் பாதிக்கப்பட்ட நிலையில் பணவீக்க அளவுகள் உலக நாடுகளில் மளமளவென உயர்ந்தது.
பொருளாதார மந்தநிலை
இதைச் சமாளிக்க மத்திய வங்கிகள் அடுத்தடுத்து ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கும் வட்டியை உயர்த்தி வந்தது, இதே நேரத்தில் உலகம் முழுவதும் வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி மந்தநிலைக்குத் தள்ளப்பட்டு வந்தது, இதில் மாட்டிக்கொண்டது முதலீட்டு நிறுவனங்கள்.
இரு பக்கமும் பாதிப்பு
இந்த நிலையில் முதலீட்டு நிறுவனங்கள் கடன் வாங்கிய இடத்திலும் பாதிப்பு அதாவது வங்கியில் வட்டி உயர்வால் கூடுதல் பணத்தைச் செலுத்த வேண்டும், மறுபுறம் முதலீடு செய்த இடத்தில் வர்த்தகம் மற்றும் வருமானம் குறைந்த காரணத்தால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications