உலக பணக்காரர்கள் என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது எலன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்டவர்கள்தான். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர் தான் உலகின் முதல் பணக்காரரான ஜான் டி ராக்ஃபிலர்.
ஜான் டி ராக்ஃபிலர் 1839 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். அவருடைய தந்தை ஒரு சேல்ஸ்மேன் . சிறுவயதிலிருந்தே சுயதொழிலில் ஆர்வம் காட்டினார். முதன்முறையாக இனிப்புகள் உள்ளிட்டவற்றை வெளியிடங்களில் இருந்து வாங்கி வந்து உள்ளூரில் இருக்கும் மக்களுக்கு விற்பனை செய்தார். இதனை அடுத்து அவரது குடும்பம் 1853 ஆம் ஆண்டு ஓஹியோவுக்கு குடி பெயர்ந்தது. அப்போது 16 வயதான அவர் ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார். அங்கே அவருக்கு ஒரு நாளைக்கு 50 சென்ட் ஊதியமாக வழங்கப்பட்டது.

தன்னுடைய 20 வயதில் ஜான் டி ராக்ஃபிலர் நண்பர்களோடு இணைந்து தானியங்கள் மற்றும் மாமிசங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டில் தற்போதைய மதிப்பில் சுமார் நான்கு லட்சம் டாலர்களை ஈட்டி இருந்தது. 1859 ஆம் ஆண்டில் தான் அமெரிக்காவில் முதன்முறையாக ஒரு எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது. பென்சில்வேனியாவில் தோண்டப்பட்ட எண்ணெய் கிணறு தான் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முன்னோடி.
அப்போது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் தேவையை உணர்ந்த ஜான் டி ராக்ஃபிலர் நண்பர்களோடு இணைந்து ஸ்டேண்டர்டி ஆயில் என்ற பெயரில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவினார். 2 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது. 1865 ஆம் ஆண்டு இவர் நண்பர்களின் பங்கையும் பெற்றுக் கொண்டு நிறுவனத்தின் முழு உரிமையையும் பெற்றுக் கொண்டார்.
1916 ஆம் ஆண்டு டாலர்கள் அடிப்படையில் செய்யப்பட்ட மதிப்பீடுகளில் உலக பணக்காரர் என்ற பெயரை பெற்றார். அதற்கு காரணம் அவருடைய ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனி ஆகும். தன்னுடைய 25ஆவது வயதில் ஜான் டி ராக்ஃபிலர் அமெரிக்காவில் 90 சதவீத எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் உரிமையாளராக இருந்தார். அவரது சொத்து மதிப்பு தற்போதைய மதிப்புடன் ஒப்பிட்டால் சுமார்ட் 350 பில்லியன் டாலர்களை மிஞ்சும்.
1937 ஆம் ஆண்டு ஜான் டி ராக்ஃபிலர் உயிரிழந்த போது அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தில் அவரது சொத்து மதிப்பு மட்டுமே 1.5 சதவீதமாக இருந்தது என சொல்லப்படுகிறது. கச்சா எண்ணை சுத்திகரிக்கும் தொழில் தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் செல்வ வளத்தை ஈட்டி தந்தது.
இதனை அடுத்து அவர் அமெரிக்காவின் மிகப்பெரிய மண்ணெண்ணெய் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கினார். இவரது நிறுவனம் விஞ்ஞானிகளை பணிக்கு அமர்த்தி பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டியது. இதனால் அமெரிக்காவில் அசைக்க முடியாத ஒரு பணக்காரராக இவர் உருவானார்.
இவருக்கு சொந்தமாக ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் கிட்டதட்ட 30 ஆண்டுகாலம் அமெரிக்காவில் சுத்திகரிப்பு , உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து என கச்சா எண்ணெய் சார்ந்த அனைத்து தொழில்களையும் நிர்வாகம் செய்து வந்தது.
தன்னுடைய பெட்ரோலிய பொருட்களை ரயில் பாதைகளில் கொண்டு செல்வதன் மூலம் அந்த நிறுவனங்களுக்கு கணிசமான தொகையை செலுத்த வேண்டிய இருப்பதை உணர்ந்த அவர் குழாய்கள் மூலம் எண்ணெய் கொண்டு செல்லும் முறையை கொண்டு வந்தார்.
இவர் சேர்த்து வைத்த சொத்து சுமார் 200 குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இதனாலேயே அவர்கள் அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர். தற்போது இவர் பெயரில் பல்வேறு அறக்கட்டளைகள் செயல்பட்டு வருகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!



Click it and Unblock the Notifications