கப்பல் பயணம் என்றாலே பலரையும் பயமுறுத்தியது இந்த டைட்டானிக் நீர்முழ்கி கப்பல் விபத்து, பிரபல யூடியூபர் Mr.Beast-ஐ இந்த பயணத்திற்கு அழைத்துள்ளனர் ஆனால் அச்சத்தால் மறுத்துவிட்டார் என அழைப்பு குறித்த ஸ்கிரீன்ஷாட்-ஐ தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற தொனியில் இந்த விபத்துக்கு பின்பு பிகிர்ந்தார்.
இந்த நிலையில் உலகிலேயே மிகப்பெரிய க்ரூஸ் கப்பலான Icon of the Seas-ன் கட்டுமான பணிகள் அனைத்தும் பின்லாந்து நாட்டில் முடிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் முதல் முறையாக டெலிவரி செய்யப்பட்டு கடலில் பயணிக்க உள்ளது. மக்களுக்கான முதல் சுற்றுலா பணத்தை ஜனவரி 2024 முதல் துவங்க உள்ளதாக திட்டமிட்டு உள்ளது Icon of the Seas கப்பலை சொந்தமாக கொண்டிருக்கும் Royal Caribbean International நிறுவனம்.
தற்போது உலகிலேயே மிகப்பெரிய க்ரூஸ் கப்பலாக இருக்கும் Wonder of the Seas-ஐ காட்டிலும் 6 சதவீதம் பெரியது, 10 அடி நீளமானது. Icon of the Seas கப்பல் 1200 அடி நீளம், 250800 டன் எடை, 7960 பயணிகள் உடன் பயணிக்க கூடியது. இந்த 7960 பயணிகளில் 5610 பயணிகள் மற்றும் 2350 பணியாளர்களும் அடங்குவார்கள்.
Icon of the Seas கப்பல் சுமார் 20 மாடிகளை கொண்டு உள்ளது, இந்த க்ரூஸ் கப்பலில் 6 பெரிய வாட்டர் ஸ்லைட்ஸ், 7 ஸ்விமிங் பூல், 9 நீர்ச்சுழல்கள் கொண்டு உள்ளது.
Icon of the Seas கப்பலின் கட்டுமான பணிகள் பின்லாந்து நாட்டின் Meyer Turku என்னும் கப்பல் கட்டுமானத்தில் நடக்கிறது. இக்கப்பலின் கட்டுமான பணிகள் ஏப்ரல் 2022ல் துவங்கியது குறிப்பிடத்தக்கது.Icon of the Seas கப்பலின் முதல் அதிகாரப்பூர்வமான பயணம் ஜனவரி 27, 2024ல் மியாமியில் இருந்து துவங்க உள்ளது.
7 இரவில் பயணம் செய்து கரிபியன் பகுதிக்கு வர உள்ளது. இந்த கப்பலில் இருந்து கடலின் அழகை 220 கோணத்தில் ரசிக்க முடியும். இந்த க்ரூஸ் கப்பல் 7 நாள் பயண சேவையை 3 விதமாக அளிக்கிறது .Trip Plan 1: மியாமி, பிலிப்ஸ்பர்க், சார்லோட் அமலி மற்றும் பஹாமாஸில் உள்ள கோகோகே-வில் சிறப்பான கொண்டாட்டம் நிறைந்த நாள்.

Trip Plan 2: பாசெட்டர், செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், சார்லோட் அமலி மற்றும் பஹாமாஸில் உள்ள கோகோகே-வில் சிறப்பான கொண்டாட்டம் நிறைந்த நாள். Trip Plan 3: மியாமி, ரோட்டன், கோஸ்டா மாயா, கோசுமெல் மற்றும் பஹாமாஸில் உள்ள கோகோகே-வில் சிறப்பான கொண்டாட்டம் நிறைந்த நாள்.
இந்த கப்பலில் சுமார் 28 வகையான கேபின் அதாவது ரூம்-கள் உள்ளது, 82 சதவீத ரூம்-களில் 3க்கும் அதிகமான பேர் தங்க முடியும், 70 சதவீத ரூம்களில் பால்கனி உள்ளது. இது மிதக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications