இந்தியா உள்பட உலகம் முழுவதும் அனல் மின்சாரம் மற்றும் அணு மின்சாரம் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் சூரிய மின்சார உற்பத்தியை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தற்போது சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிதக்கும் சூரிய மின் நிலையம்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காந்துவா என்ற பகுதியில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும் இந்த மின்சார நிலையத்தில் 2022- 23ஆம் ஆண்டில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரூ.3000 கோடி ஒதுக்கீடு
சுமார் 3,000 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும் நர்மதா நர்மதை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஓம்காரேஷ்வர் அணையில் இந்த மிதக்கும் மின்சார நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
300 மெகாவாட் மின்சாரம்
இதுகுறித்து எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் துபே அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ' உலகின் மிகப்பெரிய இந்த மிதக்கும் சூரிய மின் நிலையம் நர்மதா ஆற்றின் குறுக்கே உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் அமைக்கப்பட்டு வருகிறது என்றும், இதில் முதல்கட்டமாக முதலில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன என்றும் தெரிவித்தார்.
டெண்டர்
2022-23 ஆம் ஆண்டுக்குள் 600 மெகாவாட் மின்சாரம் இந்த மின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் அதற்கான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். என்றும் தெரிவித்தார்.
பெருமை
சூரிய மின் நிலையம் அமைக்க இந்த இடம் மிகவும் பொருத்தமான இடமாக இருப்பதாகவும் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் அமைப்பதில் பெருமை கொள்கிறோம் என்றும் சஞ்சய் துபே மேலும் கூறினார்.
ஆண்டுக்கு 4000 மெகாவாட்
ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் ஹைடல், தெர்மல் முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றும், இதனையடுத்து சூரிய வெப்பம் முறையிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதால் மொத்தமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்' என்றும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications