சென்னை: ஆப்பிள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு சார்ஜிங் கேபிள்கள், பேட்டரி, கேமரா உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கு வருகிறது ஃபாக்ஸ்லிங்க் (foxlink) நிறுவனம். இந்தியாவில் இந்நிறுவனம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஆலையை நிறுவி செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் தற்போது தமிழ்நாட்டில் ஆலையை நிறுவி வருகிறது.
ஃபாக்ஸ்லிங்க் நிறுவனம் சென்னை அடுத்த ஒரகடத்தில் புதிய ஆலையை நிறுவி வருவது எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது. தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்லிங்க் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான சார்ஜ் கேபிள்களை தயாரித்து வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் சென்னைக்கு அருகே ஒரகடத்தில் தங்களுடைய ஆலையை விரிவாக்கம் செய்து வருகிறது. கூடிய விரைவில் இங்கே உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகளை ஃபாக்ஸ்லிங்க் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது என செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் ஃபாக்சிலிங்க் இந்தியா பிரசன்ஸ் என்ற பகுதியில் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலை திருப்பதியில் இருப்பதாகவும், சென்னையில் ஆலை விரிவாக்க திட்டம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. நொய்டாவிலும் நிலத்தை கையகப்படுத்தி இருப்பதாக ஃபாக்ஸிலிங்க் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் அமைந்திருந்த ஃபாக்ஸ்லிங்க் நிறுவன ஆலையில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. இங்கிருந்த 10 யூனிட்டுகளில் நான்கு யூனிட்டுகள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்து விட்டன. இதனை அடுத்து திருப்பதியில் உள்ள ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது பெரிய தலைவலியாக இருந்து வந்தது. எனவே தங்களது ஆலையை சென்னை ஒரகடத்திற்கு இந்த நிறுவனம் மாற்ற இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஃபாக்ஸ்லிங்க் நிறுவனம் பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் கேபிள்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. அதாவது செல்போன், கணினி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது .
2023 ஆண்டில் இதன் வருவாய் கிட்டத்தட்ட 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இந்த நிறுவனம் இந்தியா, அமெரிக்கா, மியான்மர் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் சுமார் 29 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய சந்தையை பிடிக்க வேண்டும் என்று நோக்கத்திலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஆதரவு காரணமாகவும் ஃபாக்ஸ்லிங்க் நிறுவனம் தற்போது இந்தியாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவில் உற்பத்தியை அதிகப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது. எனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு தேவையான பாகங்களை தயாரித்து வழங்க கூடிய நிறுவனம் சென்னையில் ஆலையை நிறுவுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications