உலகின் மிகப்பெரிய ஆடம்பர லைப் ஸ்டைல் பொருட்கள் நிறுவனமான LVMH என சுருக்கமாக அழைக்கப்படும் louis vuitton moet hennessy புதிய சாதனை படைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் LVMH நிறுவனத்தின் உரிமையாளரான பெர்னார்ட் அர்னால்ட் ஓய்வு பெற திட்டமிட்டு உள்ள நிலையில் தனது 5 பிள்ளைகளில் ஒருவரை தனது இடத்தில் நியமிக்க வித்தியாசமான முறையில் தேர்வு செய்து வருகிறார்.
உலகளவில் வருடம் முழுவதும் சிறப்பான மற்றும் நிலையான வர்த்தகத்தை கொண்டு இருக்கும் முக்கியமான வர்த்தக பிரிவில் ஆடம்பர சந்தை முக்கியமானதாக உள்ளது. ஆடம்பர சந்தையில் லைப் ஸ்டைல் பொருட்கள் விற்பனையில் மூடி சூடா மன்னாக இருக்கும் louis vuitton moet hennessy நிறுவனம் ஐரோப்பாவிலேயே முதல் நிறுவனமாக 500 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை தொட்டு உள்ளது.

LVMH 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவில் அதிகப்படியான விற்பனையை பதிவு செய்த காரணத்தால் இந்நிறுவன மதிப்பீடு அதிகரித்துள்ளது. சீனாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்ந்து வர்த்தகம் மீண்டுள்ள காரணத்தால் ஆடம்பர சந்தைகளின் வர்த்தகம் அதிகரித்துள்ளது.
இதில் அதிகப்படியான வர்த்தகத்தை பெற்ற LVMH தற்போது 500 பில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பீட்டை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. உலகின் அனைத்து ஆடம்பர பிராண்டுகளும் அமெரிக்கா-வை தாண்டி அடுத்த முக்கிய சந்தையாக இருப்பது சீனா தான்.
இந்த நிலையில் LVMH நிறுவனத்தின் உரிமையாளரான பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு 212 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் Bernard Arnault தனது இடத்திற்கு யார் வர வேண்டும் என்பதை திட்டமிட்டு வருகிறார்.
Bernard Arnault-க்கு 5 பிள்ளைகள் உள்ளனர், தற்போது LVMH நிறுவனத்தில் ஒவ்வொருவரும் ஒரு பிரிவுக்கு தலைவராக உள்ளனர். பெர்னார்ட் அர்னால்ட்-க்கு 74 வயதான நிலையில் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் நிலைக்கு வந்துள்ளார். இதற்காக ஒவ்வொரு மாதமும் தனது 5 பிள்ளைகளையும் சந்தித்து வருகிறார் பெர்னார்ட் அர்னால்ட்.

LVMH - Moët Hennessy Louis Vuitton தலைமை அலுவலகத்தில் இருக்கும் தனிப்பட்ட டைனிங் ரூம்-ல் பெர்னார்ட் அர்னால்ட் தனது 5 பிள்ளைகளையும் ஒன்றாக சந்திக்கிறார். சுமார் 90 நிமிடம் நடக்கும் இந்த சாப்பிடும் நேரத்தில் பெர்னார்ட் தனது ஐபேட்-ல் பட்டியிலிட்டு எழுதி வைத்துள்ள பல்வேறு வேள்விகளுக்கு பதில் கேட்டு அவர்களுடைய ஆலோசனையை கேட்டு வருகிறார்.
இது மட்டும் அல்லாமல் பெர்னார்ட் அர்னால்ட் Moët Hennessy Louis Vuitton நிறுவனத்தில் பணியாற்றும் மேனேஜர்கள், உயர் அதிகாரிகள் என பல்வேறு தரப்பில் ஆலோசனைகளை கேட்டு அறிந்து தனது 5 பிள்ளைகளில் யார் தலைமை பொறுப்பை பெற போகிறார் என்ற அறிவிக்க முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் அடுத்த சில மாதங்களுக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்னார்ட் அர்னால்ட்-ன் 5 பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், இவர்களின் பொறுப்பு என்ன..?
பெர்னார்ட் அர்னால்ட்-ன் மூத்த பிள்ளையான டெல்பைன் அர்னால்ட் Christian Dior பிராண்டின் சேர்பர்சன் மற்றும் சிஇஓ-வாக உள்ளார். இவருக்கு அடுத்தது அன்டோயின் அர்னால்ட் LVMH நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தகத்தின் தலைவராக உள்ளார். இவருக்கு இக்குடும்பத்தின் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் முக்கிய பொறுப்பும் உள்ளது.
அலெக்ஸாண்ட்ரே அர்னால்ட் இவர் டிபென்னி பிராண்டின் துணை தலைவராக உள்ளார், பிரடெரிக் அர்னால்ட் இவர் TAG Heuer வாட்ச் பிராண்டின் சிஇஓ ஆக உள்ளார். ஜூன் அர்னால்ட் - 23 வயது - லூயிஸ் உய்ட்டன் வாட்ச் மார்கெட்டிங் மற்றும் டெவலப்மென்ட் பிரிவு தலைவராக உள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications