உலகப் பணக்காரர்களைப் பதம் பார்த்த கொரோனா வைரஸ்.. 444 பில்லியன் டாலர் மாயம்..!
Recommended Video
உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் இதை வெறும் ஒரு வாரத்தில் பதம் பார்த்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது தான் உண்மை.
உலகின் டாப் 500 பில்லியனர்களின் சொத்து மதிப்பு வெறும் ஒரு வாரத்தில் 444 பில்லியன் டாலர் சரிந்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ்
சீனாவில் மட்டுமே அதிகமாகப் பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது பிற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலகில் 70 சதவீத மக்களை இந்தக் கொடிய வைரஸ் தாக்கும் என அச்சம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாகப் பல வல்லரசு நாடுகளில் பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவைச் சந்தித்து வருகிறது.
அமெரிக்கப் பங்குச்சந்தை
கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அமெரிக்கப் பங்குச்சந்தை குறியீடான Dow Jones கடந்த 5 நாட்களில் 12 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது. இது 2008-09ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடிக்கு நிலையான ஒரு சரிவாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சரிவின் மூலம் சுமார் 6 டிரில்லியன் டாலர் அளவிலான சந்தை முதலீடுகள் காணாமல் போய் உள்ளது.
ப்ளூம்பெர்க்
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் அடிப்படையில் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் 500 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 444 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது.
3 தலைகள்
இதில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பீசோஸ், பில் கேட்ஸ், LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்டு அர்னால்ட் ஆகிய 3 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 30 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.
பிற பில்லியனர்கள்
ஜெப் பீசோஸ், பில் கேட்ஸ், பெர்னார்டு அர்னால்ட் ஆகியோரை தவிர,
டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் 9 பில்லியன் டாலர் சரிவையும், வாரன் பபெட் 8.8 பில்லியன் டாலர் சரிவையும், Inditex நிறுவன தலைவர் அமான்சியோ ஆர்டெகோ 6.8 பில்லியன் டாலர் சரிவையும், பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 6.6 பில்லியன் டாலர் சரிவையும், கூகிள் லேரி பேஜ், அமெரிக்கா மோவில் நிறுவன தலைவர் கார்லோஸ் ஸ்லிம், ஆல்பபெட் நிறுவன தலைவர் ஆகிய மூவரும் 6 பில்லியன் டாலருக்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளனர்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications