காசு, பணம், துட்டு, மணி, மணி! உலகின் டாப் 7 பணக்காரர்கள் இவங்கதான்! சொத்து மதிப்பை கேட்டால் தலை சுற்றும்!

தொழில்நுட்பத் துறையில் உலகளவில் பணக்காரர்களாக இருக்கும் நபர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் AI இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் ஆகியவற்றின் அசுர வளர்ச்சியே இது போன்ற செல்வந்தர்களின் சொத்து குவிப்புக்கு காரணமாக மாறியிருக்கிறது. ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவ்வப்போது உலகப் பணக்காரர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை வெளியிடும். அந்த வகையில் ஜூன் 2026-ஆம் ஆண்டின் பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலகளவில் டாப் 10 இடத்தை பிடித்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட பல ட்ரில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.

எலான் மஸ்க்: இவர் வழக்கம் போல உலகப் பணக்காரர்களின் லிஸ்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 835 பில்லியன் அமெரிக்க டாலர்கள். எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவராவார். நீண்ட காலமாக டாப் ஒன் பணக்காரராகவே இருந்து வருகிறார். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் EV வாகன சந்தையில் டெஸ்லாவின் ஆதிக்கம் ஆகியவை இவருடைய சொத்து மதிப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்து வருகிறது. இதுவரையில் யாரும் எட்டாத சொத்தை குவித்துள்ளார்.

லாரி பேஜ்: கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி பேஜ் உலகப் பணக்காரர்களின் லிஸ்டில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். கூகுளின் கிளை நிறுவனமான ஆல்ஃபபெட் சமீபகாலமாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. அதோடு இந்நிறுவனம் AI மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்களில் பல முதலீடுகளைச் செய்துள்ளது. இவருடைய நிகர சொத்து மதிப்பு 309 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

காசு, பணம், துட்டு, மணி, மணி! உலகின் டாப் 7 பணக்காரர்கள் இவங்கதான்!

செர்ஜி பிரின்: கூகுளின் மற்றொரு நிறுவனரான செர்ஜி பிரின், லாரி பேஜ்-ஐ பின்தொடர்ந்து 3-வது பணக்காரராக இடம் பிடித்துள்ளார். ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் விலகிவிட்டார். இருந்தும் நிறுவனத்தின் அசாத்திய வளர்ச்சியின் காரணமாக அவருடைய சொத்து மதிப்பு 285 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

ஜெஃப் பெசோஸ்: அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். இன்றளவும் அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் சிறந்த செயல் திறனை வழங்கி வருகிறது. அதோடு கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ப்ளூ ஆரிஜின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகளில் ஜெஃப் பெசோஸ் செய்த முதலீடுகள், அவருடைய சொத்து மதிப்பை 277 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளன.

லாரி எலிசன்: ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி எலிசன் பணக்காரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். ஒரு சில நாட்களாக ஆரக்கிள் நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிறுவனமும் AI மற்றும் AI இன்ஃப்ராஸ்ட்ரக்சரில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் இவருடைய சொத்து மதிப்பு 276 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

மைக்கேல் டெல்: டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரான மைக்கேல் டெல் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்நிறுவனம் கம்ப்யூட்டர், சர்வர்கள் விற்பனையில் முன்னணி வகிக்கிறது. தொடர்ந்து இதற்கான தேவை அதிகரித்து வருவதால் இவருடைய சொத்து மதிப்பு 244 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது

மார்க் ஜுக்கர்பெர்க்: மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பார்க் சமூக ஊடக தளங்கள் மற்றும் ஏஐ போன்றவற்றில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். இதன் காரணமாக இவருடைய சொத்து மதிப்பு 217 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+