அமெரிக்கா: உலகின் நம்பர் ஒன் பணக்காரராகவும் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் முக்கிய நபராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவரை பொறுத்தவரை மின்சார வாகனம், விண்வெளி தொழில்நுட்பம், சுரங்கப்பாதை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.
எலான் மஸ்கின் கோடிக்கணக்கிலான சொத்துகளுக்கு வாரிசாக போகும் அவரது பிள்ளைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம். எலான் மஸ்கிற்கு முதல் மனைவியான ஜஸ்டின் வில்சனுடன் அவருக்கு ஆறு பிள்ளைகள் ,இரண்டாவது மனைவியான கிரைம்ஸ் உடன் மூன்று பிள்ளைகள், மூன்றாவது மனைவி ஷிவான் ஸில்லிஸ் உடன் மூன்று பிள்ளைகள் என மொத்தம் 12 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார்.

நெவாடா அலெக்சாண்டர் மஸ்க்:
எலான் மஸ்க் மற்றும் கனடாவை சேர்ந்த எழுத்தாளரான ஜஸ்டின் வில்சன் ஆகியோர் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2002 ஆம் ஆண்டு அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. நெவாடா அலெக்சாண்டர் மஸ்க் என பெயரிடப்பட்ட இந்த குழந்தை பிறந்த 10 வாரங்களிலேயே இறந்து விட்டது.
கிரிஃபின் மற்றும் விவியான் மஸ்க்:
தங்களுடைய முதல் குழந்தை இறந்ததை அடுத்து மஸ்கும் ஜஸ்டின் வில்சனும் ஐவிஎஃப் முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். கிரிஃபின் மற்றும் விவியான் மஸ்க் என அழைக்கப்படும் இருவருக்கும் தற்போது 20 வயது ஆகிறது.
கேய், சாக்ஸன் மற்றும் டாமியன் மஸ்க்:
இந்த தம்பதி இரண்டாவது முறையாக ஐவிஎஃப் சிகிச்சை மூலம் கேய், சாக்ஸன் மற்றும் டாமியன் என மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தனர். இவர்களுக்கு தற்போது 19 வயதாகிறது. 2008ஆம் ஆண்டு மஸ்க் வில்சனை விவாகரத்து செய்தார்.
X AE A-XII மஸ்க்:
எலான் மஸ்க் 2018ஆம் ஆண்டு பாடகி கிரைம்ஸுடன் வாழ்ந்தார். 2020ஆம் ஆண்டு அவர்களுக்கு பிறந்த மகன் தான் X AE A-XII. ஆனால் 2021ஆம் ஆண்டிலேயெ இருவரும் விவாகரத்து செய்விட்டனர்.
எக்ஸா டார்க் சிட்ரேல் மஸ்க்:
2022ஆம் ஆண்டு பாடகி கிரைம்ஸ் தனக்கும் எலான் மஸ்கிற்கும் வாடகை தாய்முறையில் மகள் பிறந்திருப்பதாக அறிவித்தார். அந்த குழந்தை தான் எக்ஸா டார்க் சிட்ரேல் மஸ்க். தற்போது இந்த குழந்தைக்கு மூன்று வயதாகிறது.
ஸ்டிரைடர் மற்றும் அஸூர்:
2021ஆம் ஆண்டு எலான் மஸ்கிற்கு மூன்றாவது மனைவி ஷிவான் ஸில்லிஸுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். ஷிவான் ஸில்லில் எலான் மஸ்கின் நியூரா லிங்க் நிறுவனத்தில் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
டெக்னோ மெக்கானிகஸ்:
வால்டர் ஐசக்சன் 2023ஆம் ஆண்டி வெளியிட்ட எலான் மஸ்க் சுயசரிதை புத்தகத்தில் எலான் மஸ்க் மற்றும் பாடகி கிரைம்ஸ் 2022ஆம் ஆண்டு ஜூனில் டெக்னோ மெக்கானிகஸ் என்ற குழந்தையை பெற்றெடுத்ததாக கூறியுள்ளார். ஆனால் இந்த குழந்தை பொது வெளியில் வந்தது கிடையாது.
2024ஆம் ஆண்டில் பிறந்த குழந்தை:
எலான் மஸ்க் தனக்கு 12ஆவதாக 2024ஆம் ஆண்டில் ஒரு குழந்தை பிறந்ததாக கூறினார். ஆனால் அந்த குழந்தையின் குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை.
2024இல் பிறந்த மற்றொரு குழந்தை:
2025ஆம் ஆண்டு எழுத்தாளர் ஆஷ்லே செயிண்ட் கிளேர் தனக்கும் எலான் மஸ்கிற்கும் ஒரு 2024ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு குழந்தை பிறந்ததாக அறிவித்தார். ஆனால் அந்த குழந்தை குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியாகவில்லை.
Story written : Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications