உலகின் சக்திவாய்ந்த , அதிகார பலமிக்க நாடு எது என்ற போட்டி எல்லா காலத்திலுமே நீடிக்கிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அதிகார போட்டியை பல ஆண்டுகளாக உலகம் பார்த்து வருகிறது.
இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருப்பவர் விளாதிமிர் புதின். ரஷ்யாவின் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வருபவர் . இதற்கு முன்பு ரஷ்ய பிரதமராகவும் , ரஷ்ய உளவுத்துறை அதிகாரியாகவும் அவர் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். மேற்கத்திய நாடுகளின் எந்த நெருக்கடிகளுக்கும் அடிபணியாமல் தைரியமாக செயல்பட்டு வருபவர் .

புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தருவது தான் உலகம் முழுவதும் உற்றுநோக்கக் கூடிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. நீண்ட காலமாகவே இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புறவு நீடிக்கிறது. விளாதிமிர் புதினும் மோடியும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
விளாதிமிர் புதின் உலகின் செல்வந்தமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவர். மாட மாளிகைகளும் ஆடம்பர பொருட்களும் என இவரின் சொத்து மதிப்புகளை கேட்டால் அனைவரும் ஆச்சரியமடைந்து விடுவோம். ரஷ்ய அதிபராக ஆண்டுக்கு 1.20 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார் புதின். இவர் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சொத்து குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
தனக்கு சொந்தமாக 800 சதுர அடியில் ஒரு குடியிருப்பு, மூன்று கார்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆனால் புதின் உண்மையில் 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதின் தனக்கு சொந்தமாக 800 கார்களை வைத்திருக்கிறார் என சில இணையதள செய்திகள் கூறுகின்றன.

விளாதிமிர் புதின் தனக்கு சொந்தமாக ஒரு குன்றின் உச்சியில் 1,90,000 சதுர அடி பரப்பளவில் ஒரு மாளிகையை கட்டி வைத்திருக்கிறாராம் . இதனை Putin's Country Cottage என அழைக்கின்றனர். இந்த மாளிகையில் இருந்து பார்த்தால் கருங்கடலின் அழகிய காட்சிகள் தெரியுமாம்.
இந்த மாளிகையில் மிகப்பெரிய கேசினோ, ஐஸ் ஹாக்கி ரிங் , நைட் கிளப், தங்கத்தால் ஆன டாய்லெட் ஆகியவை உள்ளன. டாய்லெட் பிரஷ் கூட 850 டாலர் விலை மதிப்பு கொண்டதாம். சொர்க்க புரி போல இருக்கும் இந்த மாளிகை புதினுக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமான மாளிகைகளுள் ஒன்று.
இது தவிர மேலும் 19 குடியிருப்புகளை சொந்தமாக வைத்திருக்கும் புதின், 716 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெட்டை சொந்தமாக வைத்துள்ளார் இதன் பெயர் The Flying Kremlin. இதில் இல்லாத வசதிகளே இல்லையாம். மொத்தமாக புதினிடம் 20 மாளிகைகள், 58 விமானங்கள், 700 கார்கள் , 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு சொகுசு கப்பல் ஆகியவற்றை வைத்திருக்கிறார்.
புதின் தனக்கு சொந்தமாக பல ஆடம்பர கைக்கடிகாரங்களை கொண்டுள்ளார். இவை அனைத்தும் பல கோடிகள் மதிப்பு கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் இவற்றை அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சொத்துகள் என புதின் வெளிப்படுத்தியதில்லை என்பதால் உண்மையில் இதை விட அதிகமாக கூட இவரிடம் சொத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications