உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்கள் பல்வேறு இடங்களுக்கு குடிப்பெயரும் போக்கு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டில் 142,000 அதிக நிகர மதிப்பை கொண்ட தனி நபர்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டுத் தொகையை கொண்டுள்ளனர். இந்த குடிபெயர்ப்புக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
2024-ஆம் ஆண்டிலும் இதேபோல அதிக நிகர மதிப்பை கொண்ட தனி நபர்கள் வேறு நாடுகளுக்கு குடிப்பெயர்ந்தனர். அதன்படி கடந்த வருடம் மட்டும் 134,000 தனி நபர்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறினார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதைவிட இன்னும் அதிகமான நபர்கள் குடியேற திட்டமிட்டுள்ளனர். இவர்கள் துபாய், அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.

இதற்கு அப்படியே நேர்மாறாக UK-வில் இருந்து அதிக நிகர மதிப்பை கொண்ட நபர்கள் வெளியேறி வருகின்றனர். 2022-ஆம் ஆண்டில் UK-வில் 1600 நபர்கள் வெளியேறினர். இது தவிர 2023-ஆம் ஆண்டில் 3200 பேர் வெளியேறினர். இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 9500-ஆக மூன்று மடங்கு அதிகரித்தது. 2013-ஆம் ஆண்டு முதல் இடம்பெயரும் மில்லியனர்களின் எண்ணிக்கை சுமார் 178 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் குடி பெயர்ந்த 51,000 நபர்களிலிருந்து தற்போது 142,000 நபர்களாக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 தொற்று ஏற்பட்ட காரணத்தினால் மில்லியனர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறும் எண்ணிக்கை சற்று குறைந்தது. 2021-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த குடிபெயர்வுக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள், வரிவிதிப்பு கொள்கைகள், பொருளாதார அச்சுறுத்தல்கள், சிறந்த வாழ்க்கை தரம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் இந்த மில்லியனர்கள் குடிபெயர்க்கின்றனர். அதோடு 2024-ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள மில்லியனர்கள் நிலையான இருப்பிடங்களைத் தேடத் தொடங்கியுள்ளனர்.
இதில் உயர் வரிவிதிப்பு கொள்கைகள் பணக்காரர்களை பெரிதும் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே குறைந்த வரி விதிப்பு கொண்ட நாடுகளுக்கு இடம்பெயர்வது குறித்து யோசிக்கின்றனர். அதோடு பணக்காரர்கள் சிறந்த கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவற்றை வழங்கும் நாடுகளுக்கு இடம்பெயர விரும்புகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications