பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ரெஸ்டாரென்டான சென்டரலின் உரிமையாளரும் சிறந்த சமையல் கலைஞருமான விர்கிலியோ மார்ட்டினெஸ்தான் ஆனந்த்- ராதிகா திருமணத்துக்கு வெளிநாட்டு விருந்தினர்களுக்காக சைவ விருந்தை படைத்தார்.
அவரது மெனுவில் பெருவில் கிடைக்கும் அரிய காய்கறிகள் வைத்து சமைக்கப்பட்ட உணவால் நிறைந்திருந்தது. 2023-இல் உலகின் டாப் 50 புகழ்பெற்ற ரெஸ்டாரன்ட்களில் ஒன்றாக சென்ட்ரல் இடம் பெற்றிருந்தது. ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் இந்த சென்ட்ரல் ரெஸ்டாரன்ட்டில் விர்கிலியோ மார்ட்டினெஸ்ஸின் கைப்பக்குவத்தை ருசிப்பதற்காக பெரு நாட்டுக்குச் செல்லவில்லை. மாறாக மார்ட்டினெஸ்ஸையும் அவரது குழுவினரையும் மும்பைக்கு வரவழைத்தார் முகேஷ் அம்பானி.

திருமணத்துக்கு விர்கிலியோ மார்ட்டினெஸ் தந்த மெனுவில் ஸூச்சினி மற்றும் அஸ்பாரகஸ் டிராடிட்டோ, பர்ப்பிள் அமரந்த், கேஷ்யூ ரோல், மவுன்ட்டன் சிமிச்சுரி, பிரஷ் சீஸ், அவகேடோ எமல்ஷன் அண்டு பெருவியன் கார்ன், கேன்டலூப் செவிச்சே, பர்ராடா, டேட்ஸ் அண்டு லென்டில்ஸ் டிரையாங்கிள்ஸ், பிஸ்டாச்சியோ டைகர்ஸ் மில்க், எக்ஸ்ட்ரீம் ஆல்டிடியூட் சீட்ஸ் அண்டு ஸ்மோக்டு டொமேட்டோ, அமேசானியன் கசாவா டெக்ஸ்சர்ஸ், கோகனட் மில்க் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
அத்தனையும் பெரு நாட்டின் பருவ கால சிறப்பு உணவு வகைகளாகும்.
இதன் சுவையை ருசித்த விருந்தினர்கள் உண்மையிலேயே மிரண்டு விட்டார்கள். விர்கிலியோ மார்ட்டினஸ்ஸை அவர்கள் மனதாரப் பாராட்டினர். அதேவேளையில் இந்திய டெலிகஸியான தாலும் பனீரும் மெனுவில் இல்லாதது பற்றி சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய திருமணங்களில் விர்கிலியோ மார்ட்டினஸ் சமைத்து தந்துள்ளார். அவரது விருந்தினர்கள் பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரியாலிட்டி டிவி ஸ்டார்கள் கிம் காதார்ஷியன், கோலே கதார்ஷியன், மல்யுத்த வீரர் ஜான் செனா, பாலிவுட் பிரபலங்கள் ஷாரூக் கான், சல்மான் கான், அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட விவிஐபிகள் அடங்குவர். ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக மார்ட்டினஸ்ஸுடன் மும்பையைச் சேர்ந்த 13 சமையல் கலைஞர்களும் இணைந்திருந்தனர்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications