உலகளவில் கொரோனா காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்த நிறுவனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால், இக்காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்த நிறுவனங்கள் அனைத்தும் தற்போது சர்வதேச முதலீட்டாளர்களின் முக்கிய இலக்காக மாறியுள்ளது.
எப்போதும் இல்லாத வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த லாக்டவுன் காலத்தில் பங்கு விற்பனை மூலம் சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் இக்காலகட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல புதிய பிரிவுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து இந்தியாவில் பல லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அசுர வளர்ச்சியின் மூலம் ரிலையன்ஸ்-ன் பிராண்ட் மதிப்பு உலகளவில் உயர்ந்து, டாப் 100 நிறுவனங்கள் பட்டியில் பல முன்னணி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
பியூச்சர் பிராண்ட் இண்டெக்ஸ் 2020
உலகளாவிய நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து ஒவ்வொரு வருடமும் டாப் 100 பிராண்ட் மதிப்பீட்டைப் பெற்ற நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது இந்தப் பியூச்சர் பிராண்ட் நிறுவனம். இந்நிறுவனம் PWC நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டு நிறுவன பட்டியலை அடிப்படையாக வைத்துப் பிராண்ட் மதிப்பைப் பல காரணிகளை வைத்துப் பட்டிலிடுவதாக அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் தான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உலகளவில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கடந்த 6 வருடமாகப் பிராண்ட் மதிப்பீட்டுப் பட்டியலை வெளியிட்டு வரும் பியூச்சர் பிராண்ட், 2020ஆம் ஆண்டுக்கான பட்டியலை பியூச்சர் பிராண்ட் இண்டெக்ஸ் 2020 தலைப்பில் வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் உலக நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இருக்கும் நிலையிலும் 94 பில்லியன் டாலர் மதிப்புடைய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் PWC நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டுப் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 91வது இடத்தைப் பெற்று இருந்தது.
முதல் இடம்
பியூச்சர் பிராண்ட் இண்டெக்ஸ் 2020 பட்டியலில் அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனம் 1,113 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டு உடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
2வது இடத்தை ரிலையன்ஸ் பெற்றுள்ள நிலையில் 3வது தென் கொரிய நிறுவனமான சாம்சங் பெற்றுள்ளது.
பிற நிறுவனங்கள்
சாம்சங் நிறுவனத்தைத் தொடர்ந்து நிவிடா, மவ்டாய், நைக், மைக்ரோசாப்ட், ASML, பேபால், நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளது.
மேலும் டாப் 10 பட்டியலில் 100 பில்லியன் டாலருக்கும் குறைவான மதிப்பைக் கொண்ட ஓரே நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications