உலகளவில் அனைத்து நாடுகளும் மாற்று எரிசக்தி அமைப்பை நோக்கி பயணித்து வரும் வேளையில் இந்தியா மற்றும் சீனாவுக்கும் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது. உலகளவில் மாற்று எரிசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணத்தால் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த பல நாடுகள் முயற்சி செய்துள்ளது.
இந்தியா, சீனா போன்ற பல நாடுகள் நிலக்கரி மூலமாக தான் பெரும் பகுதி மின்சார உற்பத்தியை செய்கிறது. இதற்கு இணையாக மாற்று எரிபொருள் பயன்படுத்தும் நிலை வரும் பட்சத்தில் நிலக்கரி துறையை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்து இருக்கும் ஊழியர்கள் பெரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என சந்தை ஆய்வுகள் கூறப்படுகிறது.

நிலக்கரி பயன்பாடு அளவை உலக நாடுகள் குறைத்தால் 2035 ஆம் ஆண்டு வரையில் சுரங்கத் தொழிலாளர்கள் தினமும் 100 பேர் தங்களுடைய வேலைவாய்ப்பை இழக்க நேரிடும், இந்த வேலைவாய்ப்பு பாதிப்பு அதிகப்படியாக சீனா மற்றும் இந்தியாவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த வாரம் குளோபல் எனர்ஜி மானிட்டர் அமைப்பு வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையின்படி, உலகளவில் சுரங்கங்கள் மூடுவதன் வாயிலாக 2023 ஆம் ஆண்டுக்குள் சுமார் 15% உலகளாவிய நிலக்கரி சுரங்க வேலை வாய்ப்புகள் நீக்கப்பட உள்ளது. இதன் மூலம் 2035க்குள் மொத்தம் 400,000 பேர் வேலையை இழக்க நேரிடும்.
உலகளவில் மலிவான காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்திக்கு வழிகள் பிறந்துள்ள காரணத்தால், சுரங்க துறையில் வேலைவாய்ப்பை இழப்போர் எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேராக உயர அதிக வாய்ப்புகள் உள்ளது என குளோபல் எனர்ஜி மானிட்டர் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது உலக நாடுகள் அனைத்தும் பருவ நிலை மாற்றம் குறித்து அதிகம் கவலைப்படும் வேளையில், இதை சரி செய்ய இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என்பது மட்டும் அல்லாமல், வேகமாக நெட் ஜீரோ இலக்கை அடைய வேண்டும் என திட்டமிட்டு அதற்காக பணியாற்றி வருகின்றனர்.
இந்த முக்கிய இலக்குகளை அடைய முதலில் பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டை நிறுத்த வேண்டும், இதன் வாயிலாக தான் 2035க்குள் 4 லட்சம் ஊழியர்களும், 2050க்குள் 10 லட்சம் ஊழியர்களும் பணியை இழக்க உள்ளனர். இதோடு சுரங்க துறையில் அதிகப்படியான ஆட்டோமேஷன், திறன் மேம்பாட்டு, சரக்கு போக்குவரத்து மேம்பாடுகள் நடந்துள்ளது. இதன் வாயிலாகவும் அமெரிக்கா முதல் ஐரோப்பா முதல் ஆஸ்திரேலியா வரையில் சுரங்க துறையில் வேலைவாய்ப்பு இழப்பு நடந்துள்ளது.
சீனாவில் சுமார் 25 லட்சம் பேர் சுரங்க துறையில் பணியாற்றி வருகின்றனர், இந்தியாவில் கோல் இந்தியா நிறுவனத்தில் மட்டுமே 2,40,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications