ப்ளூம்பெர்க் நிறுவனம் 2023ம் ஆண்டுக்கான டாப் 10 உலக பணக்கார குடும்பங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நாம் நினைப்பது போல் நமது முகேஷ் அம்பானி குடும்பம் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய குடும்பமும் அதுதாங்க.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் அபுதாபி அரசு குடும்பம் உள்ளது. இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள குடும்பங்கள் ஊடகம், கச்சா எண்ணெய், பேஷன், அரசியல், உணவு, சில்லரை வர்த்தகம் என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

1.அல் நஹ்யான் குடும்பம்: உலகின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அபுதாபியை தளமாக கொண்ட அல் நஹ்யான் குடும்பம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆளும் சக்தியாக இருந்து வருகிறது. அவர்களின் மாற்றம் எண்ணெய் ஏற்றம் சகாப்தத்திற்கு முந்தையது. 3 தலைமுறை அல் நஹ்யான் குடும்பம் கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி டாலர் சொத்துக்களுடன் அவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் செல்வாக்கு மிக்க பதவிகளை வகிக்கின்றனர்.

2.வால்டன் குடும்பம்: அமெரிக்காவை சேர்ந்த வால்டன் குடும்பம் உலகின் மிகப்பெரிய சில்லரை நிறுவனமான வால்மார்ட்டின் 61,130 கோடி டாலர் வருவாயை நிர்வாகம் செய்கிறது. அந்த நிறுவனத்தில் 3 தலைமுறை வால்டன் குடும்பத்தினர் 46 சதவீத பங்குகளை கொண்டுள்ளனர்.2001ம் ஆண்டு முதல் போர்ப்ஸ் 400 பட்டியலில் முதல் இருபது இடங்களுக்குள் இருந்து வருகிறது. இது அவர்களின் நீடித்த நிதி வலிமை குடும்பத்தின் பாரம்பரியத்தையும் செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது.

3.ஹர்மீஸ் குடும்பம்: ஆடம்பர பேஷன் பிராண்டுக்கு புகழ் பெற்ற பிரான்ஸை சேர்ந்த 6வது தலைமுறை ஹெர்மீஸ் குடும்பம் 5,600 கோடி டாலர் சொத்துக்களை குவித்துள்ளது. அசைக்க முடியாத விசுவாசம் மற்றும் காலத்தால் அழியாத கைவினைத்திறன் ஆகியவற்றுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு உலகின் 3வது பணக்கார குடும்பம் என்ற நிலையை உறுதி செய்கிறது. ஹர்மீஸ் நிறுவனம் வீட்டு அலங்கார பொருட்கள், லெதர் பொருட்கள், லைஃப்ஸ்டைல் பொருட்கள், வாசனை திரவியங்கள், நகைகள், வாட்ச், ஆடைகள் என பல்வேறு ஆடம்பர பொருட்களை தயாரித்து வருகிறது.

4. மார்ஸ் குடும்பம்: அமெரிக்காவை சேர்ந்த பிரபல தின்பண்டங்கள் மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு தயாரிப்புகளில் முன்னோடி நிறுவனமாக மார்ஸ் குடும்பம் விளங்குகிறது. 5 தலைமுறைகளாக இந்த குடும்பத்தினர் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4,700 கோடி டாலருக்கும் அதிகமான வருவாயுடன் பல்வேறு போர்ட்போலியாவை இந்த குடும்பம் நிர்வகித்து வருகிறது.

5. அல் தானி குடும்பம்: கத்தாரை சேர்ந்த அல் தானி குடும்பத்தின் வரலாறு 8 தலைமுறைகளை கொண்டது. 19ம் நூற்றாண்டின் மத்தியில் அல் தானி குடும்பத்தின் தோன்றியது. எரிவாயு உற்பத்தி அவர்களை உலக செல்வத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. விருந்தோம்பல், காப்பீடு, ஒப்பந்த வணிகங்கள் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்கள் பல பிரிவுகளில் முதலீடு செய்துள்ளனர்.

6.கோச் குடும்பம்: அமெரிக்காவை சேர்ந்த கோச் குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக வர்த்தகம் செய்து வருகின்றனர். கச்சா எண்ணெய் நிறுவனத்தை மரபுரிமையாக கொண்டு கோச் இண்டஸ்ட்ரீஸ் உருவானது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 12,500 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. சார்லஸ் கோச்சின் நன்கொடை பங்களிப்புகள், சமூக தாக்கத்திற்கான அந்த குடும்பத்தின் உறுதிபாட்டை பிரதிபலிக்கிறது.

7.அல் சவுத் குடும்பம்: சவுதி அரேபியாவின் அரசு குடும்பத்தின் கூட்டு சொத்து, முதன்மையாக எண்ணெய் இருப்புகள் மூலம் கிடைத்தது. 3 தலைமுறை அரச குடும்பத்தின் சொத்து மதிப்பீடுகளை மிஞ்சியது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மட்டும் தனிப்பட்ட முறையில் 1,00 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளார்.

8.அம்பானி குடும்பம்: கச்சா எண்ணெய், தொலைத்தொடர்பு, ரீடெய்ல் வர்த்தகம் என பல துறைகளில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்துக்கு தலைமை முகேஷ் அம்பானி. இவரது 3 வாரிசுகளும் நிறுவன பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். அம்பானிகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு அவர்கள் வசிக்கும் 27 அடுக்கு மாடி மாளிகை ஒரு அடையாளம். இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது. அம்பானி குடும்பம் 3 தலைமுறைகளாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

9.வெர்தைமர் குடும்பம்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வெர்தைமர் குடும்பம் சேனல் பேஷன் நிறுவனத்தை கொண்டுள்ளது. 2022ல் இந்நிறுவனத்தின் வருவாய் 1,720 கோடி டாலராக இருந்தது. இந்த குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக வர்த்தகம் செய்து வருகின்றனர். பந்தய குதிரைகள் மற்றும் திராட்சை தோட்டங்கள் போன்ற பலவற்றில் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
10.தாம்சன் குடும்பம்: கனடாவின் பணக்கார குடும்பம் தாம்சன் குடும்பம். தற்போது அந்த குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையினர் வர்த்தகத்தில் தலையெடுத்து வருகின்றனர். ஊடக நிறுவனமான தாம்சன் ராய்ட்டர்ஸில் 69 சதவீத பங்கினை கொண்டுள்ளனர். தொலைத்தொடர்பு மற்றும் மீடியோ ஹோல்டிங் உட்பட பலதரப்பட்ட வர்த்தகங்களை தாம்சன் குடும்பத்தினர் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications