மியாமி, அமெரிக்கா: மூன்றாம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி இருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் மியாமி நகரில் எதிர்கால முதலீடுகளுக்கான முயற்சி என்ற உச்சி மாநாட்டில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது மூன்றாம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை என குறிப்பிட்டார். இருந்தாலும் அது போன்ற ஒரு பேரழிவை தன்னுடைய தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதலை குறிப்பிட்டு டிரம்ப் இவ்வாறு பேசினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் மோதல்கள் மற்றும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவது தன்னுடைய கடமை என டிரம்ப் குறிப்பிட்டார். அனைவரும் கொல்லப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை என கூறிய அவர், தற்போது நடைபெற்று வரும் போர்களை முடிவுக்கு கொண்டுவர நான் அவசரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்றார். பூமியை மீண்டும் அமைதி பாதைக்கு மீட்டெடுப்பது அவசியம் என டிரம்ப் குறிப்பிட்டார். இதற்கு முன்பு அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஜோ பைடனை சாடிய டிரம்ப், பைடனின் நிர்வாகமே உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மோதல்கள் அதிகரிப்பதற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
பைடன் அரசு இன்னும் ஓராண்டு காலம் பதவியில் இருந்திருந்தால் நிச்சயமாக மூன்றாம் உலகப் போர் வந்திருக்கும் என கூறிய டிரம்ப், இனி அதற்கு வாய்ப்பில்லை முட்டாள்தனமான மற்றும் முடிவுக்கு வராத போர்களை நிறுத்துவதே தன்னுடைய அரசின் இலக்கு என்றார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சு வார்த்தையை தொடங்கி வைத்திருக்கும் சவுதி அரேபியாவின் முயற்சி சமகாலத்தில் மிக முக்கியமானது என டிரம்ப் பாராட்டு தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஒரு காமெடியன் என விமர்சனம் செய்த டிரம்ப், உக்ரைன் எனக்கு மிகவும் பிடித்த நாடு, ஆனால் ஒரு மோசமான நபரான ஜெலன்ஸ்கியின் கையில் சிக்கி அந்த நாடே அழிந்துவிட்டது என கூறினார்.
ஜெலன்ஸ்கி தேவையில்லாமல் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டார் என சாடிய டிரம்ப் சண்டையில் இருக்கும் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டும்தான் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் என குறிப்பிட்டார் . மேலும் உக்ரைன் போருக்கு ஆதரவு தெரிவித்து பைடன் நிர்வாகம் 350 பில்லியன் டாலர்களை செலவு செய்திருப்பதை விமர்சித்த டிரம்ப் இந்த போரை முடித்து ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் அமைதியை நிலைநாட்டுவேன் என்றார். விரைவில் போர் நிறுத்தம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என உறுதி அளித்தார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications