இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கை உருவாக டெஸ்லா நிறுவனத்தின் தொடர் கோரிக்கையும், பேச்சுவார்த்தையும் முக்கியமான காரணம். இந்த கொள்கை டெஸ்லாவுக்கு உதவியதோ இல்லையோ, பிற முன்னணி நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் உதவுகிறது.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான ஸ்டெல்லான்டிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்லோஸ் டேவரஸ் இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி கொள்கை நிச்சயமாக எங்களுக்கு உதவுகிறது என தெரிவித்துள்ளார்.

கிறிஸ்லர், சிட்ரோன், ஃபியட் மற்றும் ஜீப் உள்ளிட்ட பல முன்னணி பிராண்டுகளை கொண்ட இந்த ஸ்டெல்லான்டிஸ் குழுமம், சமீபத்தில் சீனாவின் லீப்மோட்டர்-ல் பெரும் முதலீடு செய்து பங்குகளை கைப்பற்றிய நிலையில், இக்கூட்டணி தற்போது தமிழ்நாடு திருவள்ளூரில் உள்ள ஸ்டெல்லான்டிஸ் ஆலையில் மலிவு விலையில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியாமல் தவித்து வரும் வேளையில் சீனாவின் Leapmotor மாற்று யோசனையில் ஸ்டெல்லான்டிஸ் உடன் கூட்டணி சேர்ந்து நுழைந்துள்ளது. இந்த கூட்டணி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மலிவு விலை எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க உள்ளது.
இந்தியாவில் உயர்தர எலக்ட்ரிக் கார்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும், அதற்கான முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், இந்தியா மார்ச் 15ம் தேதி ஒரு புதிய கொள்கையை அறிவித்தது.
இந்த கொள்கையின் படி, நிறுவனங்கள் குறைந்தது $500 மில்லியன் முதலீடு செய்து உள்நாட்டு உற்பத்தியைத் தொடங்கும் பட்சத்தில், குறைந்தபட்சம் $35,000 (ரூ. 29.2 லட்சம்) மதிப்பைக் கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்ய ஐந்தாண்டுகளுக்கு 15% இறக்குமதி வரி விதிப்பு சலுகை அளிக்கப்படும்.
லீப்மோட்டர் நிறுவனம் தற்போது இந்தியாவில் மலிவு விலையிலான எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் எல்க்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா ஆகியவற்றுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் ஏற்கனவே சிட்ரோன் பிராண்டின் கீழ் திருவள்ளூரில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது, இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களுக்கு eC3 கார் மாடல்களை விற்பனை செய்துள்ளதாகவும் டேவரஸ் தெரிவித்தார்.
இந்தியாவின் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கை ஸ்டெல்லான்டிஸ் போன்ற உலகளாவிய கார் உற்பத்தியாளர்களை கவர்ந்திழுக்கிறது.
லீப்மோட்டர் உடன் இணைந்து, ஸ்டெல்லான்டிஸ் மலிவு விலையிலான எலக்ட்ரிக் வாகனங்களை உள்நாட்டு உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையை விரிவுபடுத்துவதற்கும் எலக்ட்ரிக் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் உதவும். இதேபோல் இந்த கூட்டணி மூலம் சீனாவும் இந்தியாவில் நுழைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications