இந்தியாவுக்கு மீண்டும் அப்படியொரு புகழைப் பெற்றுத் தந்துள்ளார் மறைந்த ஜாம்ஷெட்ஜி நூஸர்வஞ்சி டாடா. மகாபாரதக் கால வள்ளல் கர்ணனுக்குப் பின் தலைசிறந்த வள்ளலாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியர்களின் கொடை மாண்புக்கு ஜாம்ஷெட்ஜி டாடா ஓர் எடுத்துக்காட்டு.
டாடா குழுமத்தின் நிறுவனரான ஜாம்ஷெட்ஜி நூஸர்வஞ்சி டாடா சுமார் 102.04 பில்லியன் டாலர் அளவுக்கு டாடா நன்கொடைகளை வழங்கியுள்ளார். இது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி மெலிண்டா அளித்த 74.6 பில்லியன் டாலரை விட அதிகமாகும்.

இவர்களுக்கு அடுத்தபடியாக முதலீட்டு தந்தை வாரன் பஃபெட் 37.4 பில்லியன் டாலர், ஜார்ஸ் சோரஸ் 34.8 பில்லியன் டாலர், ஜான் டி ராக்பெல்லர் 26.8 பில்லியன் டாலர் என புருன் ரிசர்ச் மற்றும் ஈடல்கிவ் அறக்கட்டளை தயாரித்த உலகின் தலைசிறந்த 50 வள்ளல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியல் மொத்த நன்கொடையின் மதிப்பு, சொத்துகளின் மதிப்பு குறைதல் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி 22 பில்லியன் டாலர் நன்கொடை அளித்து இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இவர் தான் இந்தப் பட்டியலில் இடம் பெற்ற மற்றொரு இந்தியர்.
விப்ரோ பங்குகளின் 67 சதவீதத்தை அசிம் பிரேம்ஜி தமது அசிம் பிரேம்ஜி எண்டோவ்மென்ட் நிதிக்காக வழங்கியுள்ளார். அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளுக்குத் தேவையான நிதியுதவியை தருவதற்கு இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
ஜாம்ஷெட்ஜி டாடா கடந்த 1904 ஆம் ஆண்டு மறைந்தார். டாடா குழுமத்தின் நற்பணிகளை தற்போதைய டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா கவனித்து வருகிறார்.
பல வள்ளல்கள் தங்களது இரண்டாவது பரம்பரையினரால் நன்கொடையை செய்துள்ளனர். முதல் பரம்பரையைச் சேர்ந்த ஹென்றி போர்டு தமது போர்டு அறக்கட்டளை மூலம் தந்ததை விட அதிகம் என்று ஹுருன் தலைவர் ஹுபின் ஹூக்வெர்ப் தெரிவித்துள்ளார்.
சொத்துக்களை குவித்த வேகம் மிகவும் அபாரம். எலக்ட்ரானிக் வாகனம் தயாரிக்கும் எலான் மஸ்க் 151 பில்லியன் டாலர், அமேசான் இ-காமர்ஸ் அதிபர் ஜெப் பெஜோஸ் , பின்டுவோடுவோவின் கோலின் ஹுவாங் ஆகியோர் தலா 50 பில்லியன் டாலர்களை கடந்த 3 ஆண்டுகளில் நன்கொடையாகத் தந்துள்ளனர்.
இந்த வேகத்தில் பார்த்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களை எதிர்பார்க்கலாம். டாப் 50 வள்ளல்கள் பட்டியலில் அமெரிக்காவை சேர்ந்த 39 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த 5 பேர், சீனாவின் 3 பேர், இந்தியாவின் 2 பேர், போர்சுகல் மற்றும் ஸ்விட்சர்லாந்து தலா ஒருவர் இதில் அடங்குவர்.


Click it and Unblock the Notifications