எவ்வளவு பழசானாலும் சில பொருட்களுக்கு மட்டும் எப்போதும் விலை உயரும், அப்படிப்பட்டது தான் விஸ்கி. மதுபானம் அருந்துவது தவறானது, ஆயினும் மதுபானத்திற்கு மிகப்பெரிய வர்த்தக சந்தை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளில் அரிய வகை மதுபானங்களுக்கு எப்போதும் அதிகப்படியான டிமாண்ட் இருந்து வருகிறது. இப்படி சமீபத்தில் லண்டனில் நடந்த பிரபல நிறுவனமான சோதேபி-யின் ஏலத்தில் ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் ஒன்று 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கு ($2.7 மில்லியன்) விற்பனையாகி வரலாறு படைத்துள்ளது.

சோதேபி எப்போதும் ஆடம்பரமான பொருட்களை ஏலத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது. இதற்கு ஏற்றார் போல் சோதேபி பல பெரும் பணக்காரர்கள், அரிய பொருட்களை கலெக்ட் செய்பவர்கள் கான்டேக்ட்-ஐ வைத்துள்ளது.
இந்த நிலையில் விஸ்கி பிரியர்கள் மத்தியில் சோதேபி-யின் இந்த ஏலம் மிகவும் முக்கியமானதாக மாறியது. இதன் வாயிலாக உலகளவில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு மதுபான பாட்டில் சுமார் 22.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் ஒரு ஒயின் அல்லது மதுபான பாட்டில் இதுவரையில் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்டது இல்லை.
உலகின் மிகவும் விலை உயர்ந்த விஸ்கி என்று அழைக்கப்படும் மக்கல்லன் அடாமி 1926 (Macallan Adami 1926) சோதேபி நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த விஸ்கி பாட்டிலுக்கு நேரில் மட்டும் அல்லாமல் தொலைபேசியிலும் அதிகப்படியான ஆர்டர்கள் வந்தது,
இந்த நிலையில் மக்கல்லன் அடாமி 1926 (Macallan Adami 1926) என்ற அரிய விஸ்கி 22.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. 1986 இல் வெறும் 40 பாட்டில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த மக்கல்லன் அடாமி 1926 விஸ்கி, 60 வருடங்கள் செர்ரி பேரலில் பதப்படுத்தப்பட்டு உள்ளது.
மக்கல்லன் அடாமி 1926 போல் ஒரு விஸ்கி இல்லாதது தான் அதன் தனித்தன்மை, இது பெரும் பணக்காரர்கள் மத்தியில் தனி ஈர்ப்பை காட்டியுள்ளது. ஏலத்தில் விற்கப்பட்ட பாட்டில் இத்தாலிய கலைஞரான வலேரியோ அடாமி வடிவமைத்த லேபிளைக் கொண்டுள்ளது, இது இந்த தனித்துவமான லேபிளைக் கொண்ட பன்னிரண்டு பாட்டில்களில் ஒன்றாகும்.
ஏலத்தின் முடிவில் மக்கல்லன் அடாமி 1926 சுமார் 2,187,500 பவுண்ட்-களுக்கு விற்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications